வாய்குண்டேற்ற இயக்கம் (சுடுகலன்)
வாய்குண்டேற்ற இயக்கம் (ஆங்கிலம்: lock, லாக்) என்பது, வாய்குண்டேற்றியில் உந்துபொருளை பற்றவைக்க பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பு ஆகும். இந்த இயக்கத்தின் வகைகளாக திரியியக்கம், சக்கர இயக்கம், சொடுக்கொலி இயக்கம், சொடுக்குஞ்சேவல், மிக்கிலே இயக்கம், டாகு இயக்கம், தீக்கல் இயக்கம், மற்றும் நவீன தட்டும் மூடி விளங்கின. (சக்கர இயக்கத்தில்) சக்கரம், (தீக்கல் இயக்கத்தில்) சுத்தியல் மற்றும் தகட்டுமூடியை, இவ்வகை இயக்கமைப்பு கொண்டிருக்கும். ஒரு முழுமையான வாய்குண்டேற்றியில் இயக்கத்தகடு, தண்டு மற்றும் குழல் ஆகியவன இருக்கும். பின்குண்டேற்றிகளில், தளவாடத்தைக் கையாளும் இயங்குமுறையை பொதுவாக பின்குண்டேற்ற இயக்கம் என்பர்.[1][2]
மேலும் பார்க்க
- பின்குண்டேற்ற இயக்கம்
மேற்கோள்கள்
- Pennsylvania archaeologist, Pennsylvania archaeologist, Vol.36-40, p.13, Society for Pennsylvania Archaeology, 1966.
- Penny cyclopaedia of the Society for the Diffusion of Useful Knowledge, Penny cyclopaedia of the Society for the Diffusion of Useful Knowledge, Vol.1, p.375, C. Knight, 1833.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.