தண்டு (சுடுகலன்)

துப்பாக்கித் தண்டு அல்லது,  தண்டு என்பது குழலையும், சுடும்-இயங்குநுட்பத்தையும் தாங்கி நிற்கும்; துப்பாக்கியின் ஒரு அங்கம் ஆகும். ஒருவர் துப்பாக்கியை சுடும்போது, இந்த தண்டைத்தான்  தோளில் முட்டுகொடுத்து பிடிப்பார். சுடுநருக்கு, இந்த தண்டு தான் நல்ல பிடிமானத்தோடு ஏந்தவும், எளிதாக குறிவைக்கவும் உதவுகிறது. மேலும் பின்னுதைப்பை, சுடுநரின் உடலுக்கு, இந்தத் தண்டுதான் கடத்தும்.[1]

துப்பாக்கித் தண்டின் கூறுகள். 1) முட்டு, 2) முன்முனை, 3) கன்னந்தாங்கி, 4) இடைமுனை, 5) கடைமுனை, 6) பிடி, 7) விரல்-துளை 

வரலாறும் பெயரிடுதலும் 

ஓர் எளிய மரத்தால் தாங்கப்பட்ட, முற்கால கைப்பீரங்கி அல்லது கோண்.

ஆங்கிலத்தில் stock, shoulder stock, buttstock என பல பெயர்களால் இது அறியப்பட்டாலும்:

இந்த வார்த்தைகள், 1571-ல் இடாய்ச்சு மொழி வார்த்தையான stoc-ஐ (பொருள்: மரத்தின் தண்டு) தழுவி வந்தது.[2]

துமுக்கித்தண்டின் கூறுகள் 

துமுக்கித் தண்டை இரு பாகங்களாகப் பிரிக்கலாம்:

  • பிற்பகுதி முட்டு (1) எனப்படும். இது மேலும்; கன்னந்தாங்கி (3), இடைமுனை (4), கடைமுனை (5), மற்றும் பிடி (6) என்று பிரிக்கலாம்.  (மேலே படத்தை காண்க)


  • முன்பகுதியை முன்முனைஎன்றும் குறிப்பிடலாம் (2).  


  • கட்டை விரலை வைக்க, பிடிக்கு (6) பின்னால் விரல்-துளை (7) உள்ளது.

[3]

பலவித துமுக்கித்தண்டுப் பிடிகள்
துமுக்கித்தண்டின் கன்னந்தாங்கியின் வேறுபாடுகள் 

கட்டமைப்பு 

மரத் தண்டுகள் 

1850-களின் கடைதற்பொறியின் மீதுள்ள துப்பாக்கித்தண்டு கட்டமைப்பு (படம் தோராயமாக 2015-ல்)

அக்ரூட் கொட்டை தான் துப்பாக்கித்தண்டு செய்ய ஏற்றதாக இருப்பினும், மேப்பிள், மிர்டசு,பர்ச்சு, மற்றும் மெஸ்கீட் மரங்களும் பயன்படுத்தப்படும். மரச்சிராய் ஓட்டத்தின் (மரத்தின்மீதுள்ள வரிகள்) அமைப்பே தண்டின் வலிமையை தீர்மானிக்கின்றன, இவ்வரிகள் முன்முனை முதல் பின்முனை வரை ஓடும்படி இருத்தல் வேண்டும்; இப்பகுதிகளில் வரிகள் செங்குத்தாக இருப்பது தண்டை பலவீனப்படுத்திவிடும்.

மரத்தின் வகை மட்டுமல்ல, அதை பதப்படுத்துவதன்மூலம் அதன் பண்புகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த இயலும். துப்பாக்கித்தண்டுக்கான மரத்தை மெல்ல உலரவிட வேண்டும். இதனால் மரச்சிராயின் ஒழுங்கு சிதையாமலும் பிரியாமலும் தடுக்க இயலும். [4]

அச்சினுள் செலுத்தப்பட்ட நெகிழி 

இதை நிர்மானிக்க ஆகும் செலவு அதிகமாக இருந்தாலும், ஒரு முறை அமைத்த பின்பு, அச்சினுள் செலுத்தப்படுதல் மூலம் உருவாகும் தண்டின் விலை, மலிவான மரத்தால் ஆன தண்டுகளை தயாரிக்கும் விலையைவிட குறைவு. ஒவ்வொரு தண்டும் கிட்டதட்ட ஒரே அளவிலும், நிறைவுவேலை செய்யப்பட அவசியம் இல்லாமலும் இருக்கும். வெப்பநெகிழி பொருட்கள் அச்சினுள் செலுத்தப்பட்டு இவ்வகைத்தண்டு தயாரிக்கப்படுவதன் விளைவாக ஸ்திரத்தமின்மையும், வெப்ப நிலைத்தன்மை இல்லாமலும் இருக்கும். இவையிரண்டுமே இதன் குறைகள் ஆகும். [5]

கைவினை கலப்புத் தண்டு

கண்ணாடியிழை, கெவ்லார், கரிம இழை , அல்லது சிலவற்றின் கலவையை அதற்கேற்ற பிணைப்பியில் (ஒன்றாக பிணைக்கும் பொருள்) நிறைசெறிவூட்டி, அச்சினுள் வைக்கப்பட்டு, இருக விடப்பட்டு தயாரிக்கப்படுவதே கைவினை கலப்புத் தண்டு ஆகும். இவ்வாறு உருவான தண்டு, அச்சினுள் செலுத்தப்பட்ட நெகிழியைவிட வலிமையையும், நிலைத்தன்மையையும் கொண்டிருக்கும். இது அச்சினுள் செலுத்தப்பட்டு தயாரித்த தண்டின் பாதி எடையைதான் கொண்டிருக்கும். வழுவழுப்பான தோற்றமளிக்க, அச்சினுள் கலவையை இடுவதற்கு முன்பாக, அதனுள் கட்டிக்கூழ் பூச்சு இருக்கும். [5]

பல்லடுக்கு மரம் 

பல மரத்தால் ஆன அடுக்குகளுக்கு இடையில், கோந்து வைத்து ஒட்டி, ஒன்றாக இணைக்கப்பட்டு உருவானதுதான் பல்லடுக்கு மரம் ஆகும். நவீன பல்லடுக்குகள், 1.6மி.மீ. தடிமனுள்ள (பொதுவாக பிர்ச்சு) மரப்பலகைகளை, இப்பாக்சியில் ஊரவிட்டு, மரச்சிராய் ஓட்டம் எதிரும்புதிருமாக இருக்குமாறு அடுக்கி, அதிக வெப்பம் மற்றும் அழுத்ததில் இறுகவிடப்படும். இவ்வாறு இறுகி உருவான பல்லடுக்கு மரம், இயற்கையான மரத்தைவிட மிக அதிக வலிமையுடனும், வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கான எதிர்ப்புடனும் விளங்கும். பல்லடுக்கு தண்டின் அடர்த்தியே இதிலுள்ள பாதகமான அம்சம் ஆகும். இதனால் பல்லடுக்கு தண்டுகள், எளிய மரத்தண்டைவிட 110 முதல் 140 கிராம் வரை எடை கூடுதலாக இருக்கும். [5]

உலோகம் 

பீ.பீ.எஸ்-43, எம்.பீ-40, ழஸ்ட்டவா எம்70 போன்ற சுடுகலன்கள், உலோகத்தால் ஆன தண்டை பயன்படுத்தப்படுத்தின. ஆயுதத்தின் அளவை குறைக்கும் நோக்கில் மடிக்கவல்ல, மெல்லிய, அதேசமயத்தில் பலமான துப்பாக்கித் தண்டை உலோகத்தில் தயாரிக்க முடிந்தது. மரத் தண்டைவிட உலோகத் தண்டின் எடை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எடையை குறைக்க எஃப்.என். மினிமி போன்ற துப்பாக்கிகளில், அலுமினியம் அல்லது எஃகைவிட எடை குறைவான கலப்புலொகம் பயன்படுத்தப்பட்டன.

படிமை 

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.