பின்வழி குண்டேற்றுதல்

பின்வழி குண்டேற்றுதல் அல்லது குழலாசன குண்டேற்றம் என்பது தோட்டாப்பொதி அல்லது எறிகணையைகுழலின் பின்புறத்தில் இருக்கும் அறையினுள் புகுத்தப்படும் குண்டேற்ற முறை ஆகும். இவ்வகையில் குண்டேற்றப்படும் சுடுகலன்கள் பின்வழி-குண்டேற்ற துப்பாக்கி/பீரங்கி என்று அறியப்படும்.

ருசிய 122 மிமீ எம்1910 ஹாவித்சரின் குழலாசனம். 

பெரும் அளவில் உற்பத்தியாகும் நவ்வென சுடுகலன்கள் பின்வழி-குண்டேற்றப்படுபவை தான் (வாய்வழியாக குண்டேற்றப்படும் மோர்ட்டர் மட்டும் விதிவிலக்கு).

நீண்ட குழாய்க்குள் எறியத்தை,(அதிலும் மரையிடுதலால் ஏற்பட்ட சுருளையான பள்ளங்கள் இருக்கும் குழலுள்) திணிப்பதைவிட, துப்பாக்கி/பீரங்கியின் பின்புறத்தில் சீக்கிரமாக குண்டேற்றலாம். குறைவான மீள்குண்டேற்ற நேரம் தான் பின்வழி குண்டேற்றுதலின் சாதகம் ஆகும். 

வரலாறு 

ஸ்டாக்ஹோம்மின் சேனை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டின் முற்கால பின்-குண்டேற்ற சுடுகலன்கள்.

 பர்கண்டியில் 14-ஆம் நூற்றாண்டில் தான் பின்வழி குண்டேற்றம் வந்தது, ஆனால் 19-ஆம் நூற்றாண்டில் தான் இது நன்கு மேம்படுத்தப்பட்டது. 

கொல்லர்களுக்கு சுடுகலனின் பின்பகுதியை அடைப்பது தான் மிகப்பெரும் சவாலாக இருந்தது. சிறு துப்பாக்கிகளில் இப்பிரச்சினை, வெடிப்பொதி பயன்பாட்டால் தீர்வு கிடைத்தது. எறிகனையை சுடும் பீரங்கிகளில் திருகடைப்பால் தீர்வு கிடைத்தது.

துப்பாக்கிகள் 

பின்-குண்டேற்ற துப்பாக்கியான பிலிப் V-ன் இயங்குநுட்பம் காட்டும் படும்.[1]
ஃபெர்குசன் புரிதுமுக்கியின் பின்வழி-குண்டேற்றம் 

பீரங்கிப்படை

ஓர் பெரிய கப்பற் பீரங்கியின் குண்டேற்ற சுழற்சியை காட்டும் நகர்படம்.
பச்சை=எறியம்; மஞ்சள்=உந்துபொருள்/வெடிபொருள்.
வெடிக்கும்போது தீ சேமகத்தை அடையாமல் தடுக்க, தானியங்கிக் கதவுகள் செயல்படுவதை கவனிக்கவும்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள் 

  1. Musée de l'Armée exhibit, Paris.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.