வான்கோழி

வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர்.

வான்கோழி
புதைப்படிவ காலம்:23–0 Ma
PreЄ
Pg
N
Early Miocene – Recent
Wild turkey
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Galliformes
குடும்பம்: Phasianidae
துணைக்குடும்பம்: Meleagridinae
பேரினம்: Meleagris
L, 1758
இனங்கள்
  • M. gallopavo
  • M. ocellata
Meleagris gallopavo

உடல் அமைப்பு

இது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகவும், சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் இதனால் பறக்க முடியாது. வேகமாகவும் ஓடாது.

வசிப்பிடம்

வான்கோழிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. காட்டிலும் கூட்டமாக வசிக்கும்.

உணவுப்பழக்கம்

கோழிகளைப் போலவே தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

வாழ்க்கைமுறை

வான்கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துத் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. இவை தங்களுக்கு தீங்கு (ஆபத்து) ஏற்படும் என்று உணர்ந்தால் உரத்து (சத்தமாக) ஒலியெழுப்பும்.

வகைகள்

  • பிரான்ஸ்
  • வெள்ளை ஆலந்து
  • பெல்ட்ஸ்வில்லி

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.