வாடகை

வாடகை என்பது, ஒருவர் இன்னொருவருக்குச் சொந்தமான சொத்தையோ, பொருளையோ தற்காலிகமாகக் குறிப்பிட்ட காலத்துக்குப் பயன்படுத்துவதற்காகக் கொடுக்கப்படும் கூலி ஆகும். தற்காலத்தில் பலவகையான பொருட்களும், சொத்துக்களும் வாடகைக்கு விடப்படுகின்றன. வணிகப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள், வசிப்பதற்கான வீடுகள் முதல், அலுவலகச் சாதனங்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், வண்டிகள், உடைகள், அணிகலன்கள் போன்றவற்றை வாடகைக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

பொதுவாக, ஒரு சொத்தையோ பொருளையோ பணம் கொடுத்துச் சொந்தமாக வாங்குவதற்குத் தேவையான பண வசதி இல்லாதவர்கள் அவற்றை வாடகைக்கு எடுப்பது வழக்கம். எனினும், பண வசதி இருந்தாலும், குறித்த பொருளுக்கான நீண்டகாலத் தேவைகள் இல்லாதவிடத்து, குறுகிய காலத்துக்கு மட்டும் அவற்றை வாடகைக்கு எடுப்பதும் வழக்கம்.

வாடகைக்கு எடுப்பதன் நன்மைகள்

குறுகிய காலத்துக்கு மட்டும் தேவைப்படக்கூடிய நிலங்கள், கட்டிடங்கள் முதலிய விலை கூடிய அசையாச் சொத்துக்களையும், வாங்குவதற்கு அதிக செலவு பிடிக்கக்கூடிய வண்டிகள், இயந்திரங்கள், அலுவலகப் பயன்பாட்டுப் பொருட்கள் போன்றவற்றையும் வாடகைக்கு எடுப்பதன்மூலம் வாங்குதல் விற்றல் முதலியவற்றுக்குத் தேவைப்படக்கூடிய நேரச் செலவு, வரிகள் முதலியவற்றுக்கான பணச்செலவு முதலியவற்றைக் குறைக்கலாம். அத்துடன் வணிகத் தேவைகள் தொடர்பில் விலை கொடுத்து வாங்குவதற்குத் தொடக்கத்தில் அதிக முதலீடு தேவைப்படும். வாடகைக்கு எடுப்பதன் மூலம் இதனைக் குறைத்து அப்பணத்தைப் பிற தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.