வஸ்தோக் 5

வஸ்தோக் 5 என்பது, சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3 ஐயும் வஸ்தோக் 4 ஐயும் போல், வஸ்தோக் 5 திட்டமும், வஸ்தோக் 6 உடன் இணைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னைய இணையைப் போலவே இவ்விரண்டும் நெருக்கமாக வந்ததுடன், வானொலித் தொடர்பும் கொண்டன.

வஸ்தோக் 5
திட்ட விபரம்
திட்டப்பெயர்: வஸ்தோக் 5
அழைப்புக்குறி:Ястреб (Yastreb - "Hawk")
பயணக்குழு அளவு:1
ஏவுதல்: ஜூன் 14, 1963
11:58:58 UTC
Gagarin's Start
இறக்கம்: ஜூன் 19, 1963
11:06 UTC
53°24′N 68°37′E
கால அளவு: 4d/23:07
சுற்றுக்களின் எண்ணிக்கை:82
சேய்மைப்புள்ளி:131 கிமீ
அண்மைப்புள்ளி:130 கிமீ
காலம்:87.1 நிமிடங்கள்
சுற்றுப்பாதை சாய்வு:64.9°
திணிவு:4720 கிகி
தொடர்புள்ள திட்டங்கள்
முந்திய திட்டம்அடுத்த திட்டம்
வஸ்தோக் 4வஸ்தோக் 6


விண்வெளி வீரரான வலரி பைக்கோவ்ஸ்கி எட்டு நாட்களுக்குச் சுற்றுப்பாதையில் இருப்பதாக முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தும், சூரியக் கதிர்வீச்சு அதிகமாக இருந்ததால் திட்டத்தில் பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதியில் 5 நாட்களிலேயே பூமிக்குத் திருப்பி அழைக்கப்பட்டார். எனினும் தனி ஒருவரை ஏற்றிக்கொண்டு சுற்றுப்பாதையில் அதிக நாட்கள் இருந்த விண்கலம் இன்றுவரை இதுவே ஆகும்.


இவ் விண்கலத்தின் கழிவு சேகரிப்புத் தொகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாகக் கலத்தினுள் நிலைமை நன்றாக இருக்கவில்லை. பைக்கோவ்ஸ்கி புவிக்குத் திரும்பும் நேரத்தில், வஸ்தோக் 1, 2 ஆகிய கலங்களைப் போலவே இதிலும் சேவைக் கலத்திலிருந்து சரியாகப் பிரிய முடியாத பிரச்சினை இருந்தது. இந்த மீள்கலம் இப்போது கலூகாவில் உள்ள த்சியோல்கோவ்ஸ்கி அருங்காட்சியகத்தில் வைக்கப்படுள்ளது.

பயணக்குழு

  • வலரி எஃப். பைக்கோவ்ஸ்கி

பின்புலக்குழு

  • போரிஸ் வொல்யானோவ்

Reserve பயணக்குழு

  • அலெக்சி லியோனோவ்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.