வடக்குத் தீவு
வடக்குத் தீவு (North Island) அல்லது தெ இகா-அ-மாவுய் (Te Ika-a-Māui) என்பது நியூசிலாந்தில் உள்ள முக்கிய இரண்டு தீவுகளில் ஒன்றாகும். இத்தீவை விடப் பெரியதும், ஆனால் மக்கள்தொகை சிறியதுமான தெற்குத் தீவை குக் நீரிணையால் இது பிரிக்கிறது. வடக்குத் தீவின் பரப்பளவு 113,729 சதுர கிலோமீட்டர்கள் (43,911 sq mi) ஆகும்.[1] இது உலகின் 14வது பெரிய தீவு ஆகும். இங்குள்ள மக்கள்தொகை 3,422,000 (சூன் 2013) ஆகும். நியூசிலாந்தின் 77% மக்கள் இத்தீவிலேயே வாழ்கின்றனர். நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரம் ஆக்லாந்து, மற்றும் தலைநகர் வெலிங்டன் ஆகியன இங்கு அமைந்துள்ளன.

தெ இகா-அ-மாவுய் (மாவோரி) | |
---|---|
![]() வடக்குத் தீவின் செய்மதிப் படிமம் | |
புவியியல் | |
அமைவிடம் | ஓசியானியா |
ஆள்கூறுகள் | 38°24′S 175°43′E |
தீவுக்கூட்டம் | நியூசிலாந்து |
பரப்பளவு | 113,729 km2 (43,911 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 14வது |
உயர்ந்த ஏற்றம் | 2,797 |
உயர்ந்த புள்ளி | ருவாப்பேகு மலை |
நிர்வாகம் | |
நியூசிலாந்து | |
ISO 3166-2:NZ | NZ-N |
மண்டலங்கள் | 9 |
பிராந்திய அதிகாரங்கள் | 43 |
பெரிய குடியிருப்பு | ஆக்லன்ட் |
பல ஆண்டுகளாக இத்தீவு வடக்குத் தீவு என அழைக்கப்பட்டு வந்திருந்தாலும், தெற்குத் தீவைப் போன்று இதற்கும் அதிகாரப்பூர்வமான பெயர் இருக்கவில்லை என 2009 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் புவியியல் வாரியம் அறிந்தது.[2] பொதுக் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டு, 2013 அக்டோபரில் இதற்கு அதிகாரப்பூர்வமாக வடக்குத் தீவு (அல்லது தெ இகா-அ-மாவுய்) எனப் பெயரிடப்பட்டது.[3]
மேற்கோள்கள்
- "Quick Facts - Land and Environment : Geography - Physical Features". Statistics New Zealand (2000). பார்த்த நாள் 13 ஆகத்து 2012.
- "The New Zealand Geographic Board Considers North and South Island Names". Land Information New Zealand (21 April 2009). பார்த்த நாள் 28 நவம்பர் 2012.
- "Two official options for NZ island names". NZ Herald. 10 அக்டோபர் 2013. http://www.nzherald.co.nz/nz/news/article.cfm?c_id=1&objectid=11138153.