வ. களத்தூர்

அமைவிடம்

வ.களத்தூர் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலை 45லிருந்து 7 கி.மீ. மேற்கில் அமைந்துள்து வெள்ளாற்றின் கிளை ஆறான கல்லாற்றின் இருபுறமும் வ.களத்தூர் அமைந்துள்ளது. வண்ணாரம்பூண்டி, களத்தூர் என்பதன் சுருக்கமே வ.களத்தூர் என்பதாகும். பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள இக்கிராமம் களத்தூர், வண்ணாரம்பூண்டி , பாரதி நகர் , வள்ளியூர் , ராயப்பா நகர் மற்றும் மில்லத் நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.[1],[2] ,

நிர்வாக அமைப்பு

வ.களத்தூர், கிராமம், வேப்பந்தட்டை ஒன்றியம் - பெரம்பலூர் மாவட்ட விவகார எல்லைக்குட்பட்டது.

குக்கிராமங்கள்

வ.களத்தூர், வண்ணாரம்பூண்டி, ராயப்பா நகர், மேட்டுச்சேரி, மில்லத் நகர்.

எல்லைகள்

மேற்கே பிம்பலூர் ஊராட்சி,கிழக்கே அகரம், பேரயூர் ஊராட்சிகள், வடக்கே திருவாளாந்துரை, தெற்கே மேட்டுப்பாளயம்.

மக்கள் தொகை

வ.களத்தூர் ஊராட்சி மன்றத்தின் 2001 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 32000 ஆகும்.

பள்ளிகள்

  1. அரசு மேல்நிலை பள்ளி
  2. புனித மேரி மெட்ரிக் பள்ளி
  3. ஹிதாயத் ஆங்கிலப்பள்ளி
  4. லிட்டில் ஆனந்த் ஆங்கிலப்பள்ளி
  5. ஐடியல் மெட்ரிக் பள்ளி [3] ,

முக்கிய கோவில்கள்

மாரியம்மன் திருக்கோவில் களத்தூரில் அமைந்துள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருநாள் அனைத்து சமுதாய மக்களாலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

முக்கிய தொழில்

இக் கிராமம் விவசாயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. பணப்பயிர்களான கரும்பு, நெல், பருத்தி, சோளம் முக்கிய விவசாயங்களாகும்.

நீர்ப்பாசனங்கள்

  1. கல்லாற்றுப் பாசனம்
  2. ஆழ்துழைக் கிணறுகள் & கிணற்றுப்பாசனம்.
  3. மானாவாரி.

வங்கிகள்

தமிழகத்தின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை உள்ளது. இங்கு அனைத்து தனி நபர் மற்றும் விவசாயிகள், மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறுகின்றனர்.

விரைவான வங்கிச்சேவைக்காக வங்கி வணிகத்தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாரத ரிசர்வ் வங்கியின் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் எல்லைக்குட்பட்ட திருவாளந்துரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வங்கியின் தொலைபேசி எண் : 9840176193, 04328-251225

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ஏடிஎம்)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் கடைத்தெரு அருகிலும் செயல்படுகிறது.

தொலைதொடர்பு

BSNL தொலை பேசி அலுவலகம் இங்கு இயங்கி வருகிறது.தவிர தனியார் செல்போன் சேவைகள் AIRCEL,AIRTEL,BSNL CELONE,RELIANCE,TATA TOCOMO,VODAFONE முழுவதும் உள்ளது.

அஞ்சல் நிலையம்(பின் கோடு: 621117

621117 . அருகில் உள்ள தலைமை அஞ்சலகம்: பெரம்பலூர் - 621212.

போக்குவரத்து

சாலை போக்குவரத்து

பெரம்பலூரிருந்து எளிதில் சென்று வர சாலை வசதி உள்ளது.

மருத்துவ வசதி

களத்தூரில் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் இயங்கி வருகிறது. இங்கு இப்பகுதி மக்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். . இங்கு கால்நடை மருந்தகம் ஒன்றும் இயங்கி வருகிறது.

காவல் நிலையம்

களத்தூரில் காவல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது களத்தூர், திருவாளந்துரை, பசும்பலூர், நெய்குப்பை ஆகிய பகுதி மக்களின் பாதுகாவலனாக இக் காவல்நிலையம் இயங்கி வருகின்றது.

ஆதாரங்கள்

  1. https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2018/04/2018042648.pdf பெரம்பலூர் மாவட்ட இணையதளத்தில்
  2. https://vkalathur.wordpress.com/about/ ஊர் வரலாறு
  3. http://www.vkridealschool.com/2018/08/72.html ஐடியல் பள்ளியில் 72 ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாட்டம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.