லூயி பிரெயில்

லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

லூயி பிரெயில்
பிறப்புசனவரி 4, 1809(1809-01-04)
கூப்விரே, பிரான்சு
இறப்புசனவரி 6, 1852(1852-01-06) (அகவை 43)
பாரிசு, பிரான்சு
கல்லறைபேந்தியான், பாரிசு
48°50′46″N 2°20′45″E

இளமைக்காலம்

லூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.

சிறப்புகள்

பிரெய்லியின் படத்துடன், 2009ஆம் ஆண்டில் வெளியான ஐக்கிய அமெரிக்க நாணயம்

இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும். இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.