றெக்க (திரைப்படம்)

றெக்க (Rekka (film) என்பது இந்திய, தமிழ் அதிரடி ,மசாலாப்படம். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் இரத்தின சிவா. இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் (நடிகை), சிஜா ரோஸ், சதீஸ், கே. எஸ். ரவிக்குமார், ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் முக்கியக்கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆரஞ்சு மிட்டாய் படத்தை இணைந்து தாயாரித்த பி. கணேஷ் என்பவர் இப்படத்தைத் தயாரித்துள்ளார். டி. இமான் இசையமைக்க தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சனவரி 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் அக்டோபர் 7,2016 அன்று வெளியிடப்பட்டது.[1]

றெக்க
இயக்கம்இரத்தின சிவா
தயாரிப்புபி.கனேஷ்
கதைஇரத்தின சிவா
இசைடி. இமான்
நடிப்புவிஜய் சேதுபதி, லட்சுமி மேனன்
ஒளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்புபிரவீன் . கே. எல்
கலையகம்காமன் மேன் (சாதரண மனிதன்)
விநியோகம்சிவபாலன் பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 7, 2016 (2016-10-07)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுIndia
மொழிதமிழ்

கதை

செழியன் , டேவிட் ஆகிய இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் எதிரி. செழியன் டேவிட்டுனுடைய சகோதரனை கொலை செய்து விடுகிறான். எனவே தனது தம்பியைக் கொன்றவனைப் பழிக்குப் பழி வாங்குவதென டேவிட் சபதம் எடுக்கிறான் , அதற்கான சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறான். சிவா என்ற இளைஞன் (விஜய் சேதுபதி) கும்பகோணத்தில் வசித்து வருகிறான். அவன் தன்னுடைய பகுதியில் பெற்றோர்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் காதலர்களைத் தன்னுடைய பெற்றோர்களின் உதவியுடன் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். அதன் காரணமாகச் சிவாவிற்கு நிறையப் பிரச்சினைகள் வருகின்றன. டேவிட்டிற்குப் பார்த்த பெண்ணை அவளுக்கு விருப்பமானவருடன் (வேறொருவருடன்) சிவா திருமணம் செய்து வைக்கிறார்.அதனால் சிவாவிற்கும் டேவிட்டிற்கும் பிரச்சினை ஏற்படுகிறது. டேவிட் தன்னுடைய திருமணத்தை நிறுத்தியது யார் என்பதை தெரிய என்னுகிறான். சிவாதான் அந்த நபர் எனத் தெரிந்த பிறகு அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாது செல்கிறான். இதை அறிந்து கொண்ட சிவாவின் தந்தை டேவிட்டால் தன்னுடைய பிள்ளைக்கு ஆபத்து ஏற்படுமோ என நாற்பண்புகள் அவருக்கு வருகிறது. சிவாவினுடைய சகோதரிக்குத் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்தத் திருமணத்தில் எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது என சிவா நினைக்கிறார். ஆனால் அவனுடைய நண்பர்கள் செய்த தவறின் காரணமாக டேவிட்டிடம் சிவா சிக்கிக்கொள்கிறான். தான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் உனது தங்கையின் திருமணத்தை நிறுத்திவிடுவேன் என மிரட்டுகிறான். மதுரையில் உள்ள அமைச்சர் மணிவாசகத்தின் பெண்ணைக் கடத்திக் கொண்டுவரவேண்டும் என நிபந்தனை விதிக்கிறான். சிவா வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக் கொள்கிறான். எனவே தன்னுடைய சகோதரியின் திருமணத்தைப் புறக்கணித்துவிட்டு மதுரை செல்கிறான்.

மதுரை சென்ற பிறகு, தான் தேடிவந்த பெண்ணைப் பார்க்கிறான். ஆனால் தான் தேடி வந்த பெண் டேவிட்டிற்கு நிச்சயம் செய்த பெண் என்பது சிவாவிற்கு தெரியாது. சிவா , பாரதியை கடத்தியதற்கு அத்தாட்சியாக அவளுடன் ஒரு தாமி எடுத்து அனுப்பச் சொல்கிறான் டேவிட். ஆனால் பாரதியோ தான் சிவாவுடன் செல்வதாக தனது வீட்டார் முதற்கொண்டு அனைவரிடமும் சொல்லிவிட்டுச் செல்கிறாள். மனிவாசகத்தினுடைய ஆட்கள் அவர்களை தடுத்துநிறுத்த முயல்கிறார்கள். ஆனால், அவர்களிடமிருந்துத் தப்பித்து செழியனிடம் செல்கின்றனர். அதே சமயம் தன்னுடைய சகோதரியின் திருமணத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளனவா என்பதைத் தன்னுடைய நண்பன் கீரையின் மூலமாக அவ்வப்போது சிவா தெரிந்துகொள்கிறான். கோயமுத்தூரில் தன்னுடைய காதலை சிவாவிடம் சொல்வதற்காகப் பாரதி காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் சிவா , பாரதி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தன்னுடன் எவ்வாறு வருகிறாள் என்பது தெரியாமல் குழப்பமடைகிறான். அந்த சமயத்தில் சிவா தன்னுடைய இளம்பிராய காதல் பற்றி பாரதியிடம் கூறுகிறான்.டேவிட் ,செழியனை பழிவாங்குவதற்காகப் பாரதியை தன்னுடன் கூட்டிச் செல்கிறான். அதே சமயத்தில் மாலா அக்காவை சிவாஅங்கு பார்க்கிறான். மாலா அக்காவை அவனுடன் கூட்டிச் செல்கிறான். செழியன் மற்றும் டேவிட்டிடமிருந்து பாரதியை சிவா காப்பாற்றுகிறான்.

இறுதியில் பாரதியின் தந்தை ஆட்களுடன் சிவா மோதுவதாக இத்திரைப்படம் அமைந்திருக்கும்.

கதை மாந்தர்கள்

  • விஜய் சேதுபதி (சிவா)
  • லட்சுமி மேனன் (நடிகை) (பாரதி)
  • ஸ்ரீஜா ரோஸ் (மாலா)
  • கிஷோர் (செல்வம்)
  • ஹரிஷ் உத்தமன் (டேவிட்)
  • கபிர் துகன் சிங் (செழியன்)
  • சதீஸ் (கீரை)
  • கே. எஸ். ரவிக்குமார் (ரத்தினம்) சிவாவின் தந்தை
  • ஸ்ரீ ரஞ்சனி (சிவாவின் தாய்)
  • மீரா கிருஷ்ணன் (பாரதியின் தாய்)
  • சாலு சம்மு (பாரதியின் தோழி)
  • சவுந்தர் ராஜா
  • கே. எஸ். ஜி. வெங்கடேஷ் (மணிவாசகம் )

ஒலிவரி

டி. இமான் இத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவானது செப்டம்பர் 25,2016 அன்று நடைபெற்று அனைத்துப் பாடல்களும் வெளியிடப்பட்டன.[2] பிஹைண்ட் உட்ஸ் இதற்கு 2.5/5 வழங்கியுள்ளது.[3]

வ.எண் பாடல் பாடகர்கள் நீளம்
1 விர்ரு விர்ரு .. ஜித்தின் ராஜ் [4] 4:21
2 கண்ண காட்டு போதும் சிரேயா கோசல் 4:30
3 பொல்லா பைய்யா ஹரிசரன் ,சுவேதா மோகன் 4:19
4 கண்ணம்மா, கண்ணம்மா நந்தினி ஸ்ரீகர் 4:01
5 கருப்பாடல் இமான், விஜய் சேதுபதி 2:35
6 கண்ண காட்டு போதும் (உபகரணங்கள்) 4:30
7 கண்ணம்மா, கண்ணம்மா 4:01

வெளியிணைப்புகள்

'இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் றெக்க (திரைப்படம்)

சான்றுகள்

  1. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Watch-Rekka-teaser-Vijay-Sethupathi-goes-commercial/articleshow/53868790.cms
  2. http://www.behindwoods.com/tamil-movies-events/rekka-audio-launch-event-story.html
  3. http://www.behindwoods.com/tamil-movies/rekka/rekka-songs-review.html
  4. https://itunes.apple.com/in/album/rekka-original-motion-picture/id1155799976
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.