ரிஷி (2001 திரைப்படம்)
ரிஷி 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் குமார், சங்கவி, அருண் பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். 16 பிப்ரவரி 2001 அன்று வெளியான இப்படம் ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.
ரிஷி | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி |
தயாரிப்பு | மீனா பஞ்சு அருணாச்சலம் |
கதை | ஏ, ஜவஹர் (வசனம்) |
திரைக்கதை | சுந்தர். சி |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | சரத் குமார் மீனா பிரகாஷ் ராஜ் சங்கவி அருண் பாண்டியன் தேவன் எஸ்.வி.சேகர் ரமேஷ் கண்ணா |
ஒளிப்பதிவு | யு.கே.செந்தில் குமார் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | பி. ஏ. ஆர்ட் ப்ரொடக்க்ஷன்ஸ் |
வெளியீடு | 16 பிப்ரவரி 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
கதைச்சுருக்கம்
திருடுதலை தொழிலாகக் கொண்டவன் ரிஷி (சரத் குமார்). கொள்ளைக்கார ரவுடியான சாத்தியனிடம் (அருண் பாண்டியன்) அடியாளாக வேலை செய்கிறான் ரிஷி. அவ்வாறாக ஒரு சமயம், மந்திரி தேவராஜ் (தேவன்) பத்திரிக்கையாளர் ஹேமாவை கொல்வதை பார்த்துவிடுகிறான் ரிஷி. சாகும் தருவாயில், ஹேமா ரிஷியிடம் ஒரு பிளாப்பி டிஸ்கை தருகிறாள். ஆனால், அதை பெரிதாக சட்டை செய்யவில்லை. ஆனாலும் அந்த பிளாப்பி டிஸ்க் தேவராஜுக்கு தேவையாக இருக்கிறது. வேலு பார்ப்பதற்கு ரிஷியை போலவே இருப்பான். ஆனால், மிகவும் நல்லவன். அந்நிலையில், கண்கள் தெரியாத நந்தினியை (சங்கவி) காப்பாற்றி கண் அறுவை சிகிச்சைக்கு பணம் உதவி செய்து அவளை பார்த்துக்கொள்கிறேன் ரிஷி. வேலுவை ரிஷி என்று நினைத்து தேவராஜுவின் அடியாட்கள் தாக்குகிறார்கள். வேலுவும் ரிஷியும் மருத்துவமனையில் சந்திக்கும் பொழுது நட்புக் கொள்கிறார்கள்.
தேவராஜின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டதால், நந்தினியை கடத்தி, ரிஷியை முதலமைச்சரை (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) கொல்லும்படி மிரட்டுகிறான் தேவராஜ். ரிஷிக்கு பதிலாக வேலு அந்த இடத்திற்கு சென்றுவிடுகிறான். வேலுவுக்கும் ரிஷிக்கும் என்னவானது? முதலமைச்சர் காப்பாற்றப்பட்டாரா? நந்தினிக்கு என்னாவது? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.
நடிகர்கள்
- சரத் குமார் - வேலு, ரிஷி
- மீனா - இந்து
- பிரகாஷ் ராஜ் - காவல் அதிகாரி
- சங்கவி - நந்தினி
- அருண் பாண்டியன் - சத்தியன்
- தேவன் - தேவராஜ்
- எஸ்.வி.சேகர்
- ரமேஷ் கண்ணா - சீனு
- எஸ்.எஸ்.ராஜேந்திரன் - முதலமைச்சர்
- மதன் பாப்
- தளபதி தினேஷ்
- கிரேன் மனோஹர்
- புவனேஸ்வரி
ஒலிப்பதிவு
பா. விஜய் மற்றும் பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.[1]
ட்ராக் | பாடல்[2] | பாடகர்கள் | காலம் |
---|---|---|---|
1 | வா வா பூவே வா | ஹரிஹரன் , எஸ். ஜானகி | 4:56 |
2 | நிலவை கொஞ்சம் | அனுராதா ஸ்ரீராம் | 4:37 |
3 | ஓ மானே மானே மானே (ஆண்) | ஹரிஹரன் | 5:36 |
4 | காற்றோடு புயலாக | ஷங்கர் மகாதேவன் , அனுபமா | 3:57 |
5 | ஓ மானே மானே மானே (பெண்) | சுஜாதா மோகன் | 5:35 |
6 | ஜம்போ இது காதல் | எஸ்.பி.பி. சரண் , சுஜாதா மோகன் | 4:22 |