ராட்கிளிஃப் கோடு

ராட்கிளிஃப் கோடு (Radcliffe Line) என்பது இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு. இது ஆகஸ்ட் 17, 1947 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சிரில் ராட்கிளிஃப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 175,000 சதுர மைல்கள் (450,000 கிமீ²) பரப்பளவு நிலத்தை இவ்வெல்லைக்கோடு கொண்டு பிரித்தது[1].

இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் 1947, 1948 களில் விடுதலை அடைந்து இந்தியா, பர்மா, இலங்கை, பாகிஸ்தான் என நான்கு தனிநாடுகளாயின. தனிநாடாக இருந்த சிக்கிம் இவ்வரைபடத்தில் காட்டப்படவில்லை.

மேற்கோள்கள்

  1. p. 482, Read, A. and Fisher, D. (1997). The Proudest Day: India's Long Road to Independence. New York: Norton.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.