ராஜமோகன்
ராஜ மோகன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படமானது வை. மு. கோதைநாயகியின் ராஜமோகன் என்ற புதினத்தின் தழுவலாகும்.
ராஜ மோகன் | |
---|---|
இயக்கம் | பிரேம் சேத்னா |
தயாரிப்பு | நேஷனல் மூவி டோன் |
கதை | வை. மு. கோதநாயகி அம்மாள் |
இசை | யானை வைத்தியநாத ஐயர் |
நடிப்பு | பி. யு. சின்னப்பா காளி என். ரத்தினம் கே. பி. கேசவன் டி. ஆர். பி. ராவ் ஏ. கே. ராஜலட்சுமி எம். என். ராதாபாய் டி. ஏ. மதுரம் |
ஒளிப்பதிவு | திலங் |
வெளியீடு | 1937 |
ஓட்டம் | . |
நீளம் | 19000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
மோகன் என்பவன் ஒரு அனாதை இளைஞனாவான். அவன் பத்திரிக்கை அதிபரான தர்மலிங்கத்தின் மகளான ராஜம் என்பவளை காதலிக்கிறான். மேகனின் வளர்ப்புத் தாயான கல்யாணி என்பவராவார். மோகனின் உண்மையான தாய் யார் என்பதும், ராஜமும் மோகனும் இறுதியில் சேர்ந்தார்களா என்பதுமே கதைமுடிவாகும்.[2]
உசாத்துணை
- (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails32.asp.
- அறந்தை நாராயணன் (செப்டம்பர் 29 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள். ஜகன்மோகினி கோதைநாயகி". தினமணிக் கதிர்: 14-15.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.