கே. பி. கேசவன்
கே. பி. கேசவன் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் நாடக நடிகராவார். இந்திய விடுதலைப் இயக்கம் நடந்தபோது பதி பக்தி, கதர் பக்தி, பம்பாய் மெயில், நாகபுரி கொடிப் போர் போன்ற தேசிய நாடகங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

இரு சகோதிரர்கள் படத்தில் கே. பி. கேசவன்
வாழ்க்கை
கே.பி.கேசவன் அன்றைய சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பாலக்காட்டின் ஒரு பகுதியான ஒலவக்கோட்டில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே பாடும் திறமையைப் பெற்றிருந்த இவரை, இவரது பெற்றோர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்தனர். சிறு வயதுமுதலே புராண, இதிகாச நாடகங்களில் நடித்து வளர்த்திருந்து, ராஜபார்ட் நடிகராக உயர்ந்தார். அவர் நடித்த நாடகங்கள் திரைப்படங்களாக ஆனபோது சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.[1]
நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
- பிரதீப் மாதவன் (2017 திசம்பர் 7). "இந்திய மேடைப் புலி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 8 திசம்பர் 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.