யோக்யகர்த்தா

யோக்யகர்த்தா (Yogyakarta, /ˌɒɡjəˈkɑːrtə, ˌjɒɡ-/;[2] மற்றும் ஜோகியா அல்லது ஜோகஜாகர்த்தா) இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள நகரமும் அதே பெயரிலுள்ள யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியின் தலைநகரமும் ஆகும். இது இந்தோனேசிய தேசியப் புரட்சிக் காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத் தலைநகரமாகவும் இருந்துள்ளது. யோக்யகர்த்தாவின் ஒரு பகுதியான கோட்டாகெடே 1575 முதல் 1640 வரை மாதாராம் சுல்தான்களின் தலைநகரமாக இருந்துள்ளது. இந்த நகரம் கல்வி மையமாகவும் (கோட்டா பெலாஜார்), பத்தீக் , பாலே நடனம், நாடகம், இசை, கவிதை, பொம்மலாட்டக் கலைகள் போன்ற செம்மைச் சாவக நுண்கலை மற்றும் பண்பாடுகளின் மையமாகவும் விளங்குகின்றது.

யோக்யகர்த்தா
ꦔꦪꦺꦴꦒꦾꦏꦂꦠ
நகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: துகு நினைவாலயம், ஜாலன் மாலியோபொரொ, கிராட்டன் யோக்யகர்த்தா, இந்தோனேசிய யோக்யகர்த்தா வங்கி, கட்ஜா மடா பல்கலைக்கழகம்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): கோட்டா பெலஜார் (மாணாக்கர் நகரம்), கோட்டா புதயா (பண்பாட்டு நகரம்), கோட்டா குடெகு (குடெகு நகரம்)
குறிக்கோளுரை: ꦲꦩꦼꦩꦪꦸꦲꦪꦸꦤꦶꦁꦧꦮꦤ (சாவகம்)
(பொருள்: "மிகச்சரியான சமூகத்திற்கான கனவு")

யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் அமைவிடம்
யோக்யகர்த்தா
யோக்யகர்த்தா
சாவகத்திலும் இந்தோனேசியாவிலும் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°48′5″S 110°21′52″E
நாடு இந்தோனேசியா
வலயம்சாவகம் (தீவு)
மாகாணம்யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி
பரப்பளவு
  நகரம்46
  Metro2,159.1
ஏற்றம்113
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு)
  நகரம்4,12,331
  அடர்த்தி9
  பெருநகர்40,10,436
  பெருநகர் அடர்த்தி1
மக்களியல்
  சமயம்[1]இசுலாம் 83.22%
கிறிஸ்தவம் 15.65%
பௌத்தம் 0.29%
இந்து 0.20%
கன்பூசியம் 0.02%
பிறர் 0.01%
நேர வலயம்இந்தோனேசிய மேற்கு நேரம் (ஒசநே+7)
அழைபகுதி குறியீடு(+62) 274
வாகனப் பதிவுAB
HDI 0.837 (மிக உயர்ந்தது)
இணையதளம்www.jogjakota.go.id

இந்நகரின் மக்கள்தொகை 2010இல் 388,627 ஆகும். இந்தோனேசியாவிலேயே மிக உயர்ந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் 0.837 கொண்டுள்ள யோக்யகர்த்தா மிக வளர்ந்த நகரமாக கருதப்படுகின்றது.[3]

குறிப்புகள்

  1. Data Sensus Penduduk 2010 - Badan Pusat Statistik Republik Indonesia <http://sp2010.bps.go.id/index.php/site/tabel?tid=321&wid=3400000000&lang=id>
  2. "Yogyakarta | Define Yogyakarta at Dictionary.com". Dictionary.reference.com. பார்த்த நாள் 5 June 2011.
  3. Indeks-Pembangunan-Manusia-2014

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.