யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா
யெலோஸ்டோன் தேசியப் பூங்கா (Yellowstone National Park, "Yellowstone" என்ற பொருள் "மஞ்சக்கல்") அமெரிக்காவில் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா ஆகும். மார்ச் 1, 1872 இன்றிய பூங்கா இருக்கும் இடத்தை அமெரிக்க அரசு தேசிய பூங்காவாக படைத்தது. இப்பூங்காவின் மிக புகழான இடம் ஓல்ட் ஃபெய்த்ஃபுல் நீர் சூடேற்றி ஆகும். இது தவிர பல காடு, விலங்கு வகைகளும் யெலோஸ்டோன் ஏரியும் பார்க்க சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர். ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவுக்கு வருகின்றனர்.

11,000 ஆண்டுகளாக அமெரிக்கப் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் வசிக்கின்றனர். இன்று இப்பூங்கா 8,987 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பெரும்பான்மை வயோமிங் மாநிலத்தில் அமைந்துள்ளது, ஆனால் வடக்கிலும் மேற்கிலும் சிறிய பகுதிகள் ஐடஹோ மற்றும் மொன்டானா மாநிலங்களிலும் அமைந்துள்ளன.

உலகில் வடக்கு மிதவெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய கெடுக்காத சூழ்நிலை இப்பூங்காவில் உள்ளது. கிரிசிலி கரடி, ஓநாய், எருமை போன்ற விலங்குகள் இப்பூங்காவில் வாழ்கின்றன. இப்பூங்காவிலுள்ள பெரிய காடுகள் மற்றும் புன்னிலங்களில் பல தாவர இனங்களும் வாழ்கின்றன. ஆண்டுதோரும் காட்டுத்தீ நடைபெறும்; 1988இல் நடந்த காட்டுத்தீயில் பூங்காவின் 36% எரிந்தது. மீன்பிடிப்பு, கப்பல் ஓட்டம், முகாம் செய்வது, நெடுந்துர நடப்பு போன்ற பொழுது போக்கு நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளால் செய்யமுடியும். குளிர் காலத்தில் பனிவண்டியை பயன்படுத்தி பூங்காவை பார்க்கமுடியும்.
யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவை, ஐக்கிய அமெரிக்க நாட்டின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.[1]