யெகுடா அமிசாய்
யெகுடா அமிசாய் ( Yehuda Amichai 3 மே 1924–22 செப்டம்பர் 2000) என்பவர் இசுரேலியக் கவிஞர். இவர் இசுரேலிலும் உலக அளவிலும் பேசப் படுகிற நவீனக் கவிஞர் ஆவார்.[1] கவிதைகள், கதைகள், புதினங்கள், நாடகங்கள் ஆகியவற்றை ஈப்ரு மொழியில் படைத்தார்.[2]

பிறப்பும் வளர்ப்பும்
யெகுடா அமிசாய் ஒரு யூதர் குடும்பத்தில் செருமானியில் வூர்சுபர்க் என்னும் ஊரில் பிறந்தார். தமது 11 அகவை வரை செருமானியில் வாழ்ந்தார். தொடக்கக் கல்வியை அங்கே முடித்தார். பின்னர் இவருடைய பெற்றோர் செருசலேமுக்குக் குடிபெயர்ந்து சென்றதால் இவரும் அங்கு போனார். ஈப்ரு மற்றும் செருமனி மொழிகளைக் கற்றும் பேசியும் வந்தார். இவரது செருமானியப் பெயர் லுத்விக் பூப்பர் ஆகும்.[3] இவரது படைப்புகளும் ஈப்ரு மொழியில் அமைந்தன.
பிரிட்டிசு இராணுவத்தில் சேர்ந்து பணி செய்து இரண்டாம் உலகப் போரில் பங்கு கொண்டார். 1946 இல் படைப் பணியிலிருந்து வெளியேறினார். சில ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.
படைப்புகள்
போர் முடிந்ததும் அமிசாய் பைபிளையும் ஈப்ரு இலக்கியங்களையும் செருசலேம் ஈப்ரு பல்கலைக் கழகத்தில் கற்றார். 1955 இல் தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலை எழுதி வெளியிட்டார். இவரது கவிதைகளில் யூத இன மக்களின் வரலாறு பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் பாடப்பட்டன. இவரது கவிதைகள் 40 மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலக் கவிஞர் டேட் ஹியூஸ் என்பவர் அமிசாய் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
பேராசிரியராக
பெர்கிலி கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருந்தார். 1987இல் நியுயார்க்கு பல்கலைக் கழகத்தில் கவிஞராக இருந்தார். இசுரேலியா கருத்தரங்கில் ஆசிரியர்களுக்கு இலக்கியம் கற்பித்தார். ஈப்ரு பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு இலக்கியம் கற்றுக் கொடுத்தார்.[4]
பெற்ற பரிசுகளும் விருதுகளும்
சியோன்ஸ்கி பரிசு (1957)
பிரென்னர் பரிசு (1960)
பியாலிக் பரிசு (1976)
இசுரேல் பரிசு (1982)
மால்ராக்ஸ். பன்னாட்டு புத்தகக் கண்காட்சி-பிரான்சு (1994)
மெசிடோனியா தங்கம் ரீத் விருது பன்னாட்டுக் கவிதை விழா (1995)
மத்திய தரைக் கடல் பிரதேசத்தில் அமைதி ஏற்படுத்தியமைக்காக யாசர் அராபத், சிமோன் பெரெஸ், இட்சாக் ரபீன் ஆகிய மூவருக்கும் ஓஸ்லோவில் நடந்த நோபல் பரிசு வழங்கிய விழாவில் எகுடா அமிசாயின் கவிதை ஒன்றைப் படித்துக் காட்டினார் இட்சாக் ரபீன். அப்பொழுது அவ்விழாவில் அமிசாய் கலந்து கொண்டார்.
மேற்கோள்
- Yehuda Amichai criticism. Enotes.com (2 May 1924).
- Liukkonen, Petri. "Yehuda Amichai". Finland: Kuusankoski Public Library. மூல முகவரியிலிருந்து 4 January 2005 அன்று பரணிடப்பட்டது.
- Love, War and History: Israel's Yehuda Amichai, All Things Considered, 22 April 2007
- Religious metaphor and its denial in the poetry of Yehuda Amichai. Findarticles.com.