யானைக்கால் நோய்
யானைக்கால் நோய் (Elephantiasis) wதோலும், அதன் கீழே உள்ள திசுக்களும், குறிப்பாக கால்களும், ஆண் இனப்பெருக்க உறுப்பும் மிகவும் தடிப்பாகிவிடும் ஒரு நோயாகும். சில நோயாளிகளில் இந்நோயானது, சில உடல் உறுப்புகளை (உதாரணமாக, விரைப்பை) கூடைப்பந்து அளவிற்கு ஊதிப் பெருக்கச் செய்துவிடும்[1]. இது ஃபைலேரியா (Filaria) என்னும் நுண்புழுவாலும், ஃபைலேரியா போன்ற ஒட்டுண்ணிகள் இல்லாமலும் ஏற்படும் நோயாகும்[2]. இந்நோய், இழை (நூல்) போன்ற நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் கொசுக்களால் பரவுவதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது[3]. இது காலைத் தவிர பிற பகுதிகளையும் கூடக் தாக்கும். ஆனால் பெரும்பாலும் நிணநீர் மண்டலத்தின் (lymphatic system) வழியே காலைத் தாக்குவதால் கால் ஊதிப்பெருத்து யானையின் கால் போல் தோற்றம் தருவதால் யானைக்கால் நோய் எனப் பெயர் பெற்றது. இந்தியாவில் கியுலக்ஸ் என்ற வகையான கொசுக்கள் கடிப்பதால் யானைக்கால் நோய் பரவுகிறது.
யானைக்கால் நோய் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectiology |
ஐ.சி.டி.-10 | B74.0 (ILDS B74.01) I89. |
ஐ.சி.டி.-9 | 125.9, 457.1 |
நோய்களின் தரவுத்தளம் | 4824 |
ஈமெடிசின் | derm/888 |
MeSH | D004605 |


நோயின் அறிகுறிகள்
கியுலக்ஸ் என்ற வகையான கொசுக்கள் கடிப்பதால் இந்நோய் வருகிறது. இந்த நோய் இருப்பவர்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் காய்ச்சல் அடிக்கும், நெறிகட்டுதல், கால்வீக்கம், விறைவீக்கம் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
யானைக்கால் நோய் வந்தவர்களின் கால் யானையின் காலைப்போல் வீங்கிவிடும். நடக்க கடினமாகும். காலை மடக்கி உட்கார முடியாது எனப் பல தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.
தடுப்பு மருந்துகள்
டி.இ.சி மற்றும் அல்பென்டோசெல் என்ற இந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டால் இந்த நோய் வராமல் காத்துக்கொள்ள முடியும்.
மாத்திரைகள் உட்கொள்ளும் முறை
டி.இ.சி என்ற மாத்திரை குழந்தைகளுக்கு ஒன்று, அல்பெண்டாசோல் என்ற மாத்திரை ஒன்று, 6 முதல் 14 வயது உள்ளவர்களுக்கு இரண்டு ஒன்று என்ற கணக்கிலும், 15 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு மூன்று, ஒன்று என்ற கணக்கில் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் யானைக்கால் நோயை உற்பத்தியாக்கும் வைரஸசான மைக்ரோ ஃபைலேரியா என்ற வைரஸ் கிருமி அழிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இம்மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இந்நோய் பரவுவது தடை செய்யப்படுகிறது.
உணவுக்கு பின் இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை உட்கொண்டபின் காய்ச்சல் வந்தால் அவர்களது உடலில் அந்த நோய் கிருமிகள் உள்ளது என்பது பொருள். இதற்காக உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மாத்திரைகள் வழங்ககூடாது.
மேற்கோள்கள்
- McNeil, Donald (2006-04-09). "Beyond Swollen Limbs, a Disease's Hidden Agony". New York Times. http://www.nytimes.com/2006/04/09/world/americas/09lymph.html. பார்த்த நாள்: 2008-07-17.
- Davey, Gail (2008). "Podoconiosis: let Ethiopia lead the way". The Ethiopian Journal of Health Development 22 (1): 1–2. http://ejhd.uib.no/ejhd-v22-n1/1%20Podoconiosis%20let%20Ethiopia%20lead%20the%20way.pdf.
- Centers for Disease Control and Prevention. (2008). "Lymphatic Filariasis". பார்த்த நாள் 24 March 2012.
வெளியிணைப்புகள்
பொதுவகத்தில் Elephantiasis தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- யானைக் கால் நோய் வந்தவரின் காணொளி காட்சி
- Podoconiosis blog with video from Gimbie, Ethiopia
- 'End in Sight' for elephantiasis -Retrieved Oct 9 2008
- Antibiotics help combat Elephantiasis
- Elephantiasis photographic documentation
- The Carter Center Lymphatic Filariasis Elimination Program