யாதவர் கல்லூரி

யாதவர் கல்லூரி தமிழ் நாட்டில் மதுரையில் அமைந்துள்ள தன்னாட்சிபெற்ற இருபாலர் பயிலும் அரசுதவிபெறும் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி இயற்பியல், கணிதம், வேதியியல், விலங்கியல், கணனியியல், தகவல் தொழிற்நுட்பம் முதலான அறிவியல் பிரிவிலும் தமிழ், வரலாறு, வணிகவியல் முதலான கலைப் பிரிவிலும் கல்வி வழங்குகிறது.

யாதவர் கல்லூரி

குறிக்கோள்:அறிவே செல்வம்
நிறுவல்:1969
வகை:தன்னாட்சிபெற்ற கலை, அறிவியல் கல்லூரி
நிதி உதவி:யாதவர் கல்விநிதி
முதல்வர்:எசு. தனசேகரன் (பொறுப்பு)
பீடங்கள்:11
ஆசிரியர்கள்:246
மாணவர்கள்:2912
அமைவிடம்:திருப்பாலை, மதுரை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்:கோவிந்தராஜன்
இணையத்தளம்:www.yadavacollege.org

வரலாறு

பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கல்வியறிவை வளர்க்க, 1969ஆம் யாதவ சமூக மக்களால் யாதவர் கல்லூரி தொடங்கப்பட்டது. 1970ஆம் ஆண்டில் இக்கல்லூரிக்கு தமிழக அரசின் உதவி கிடைத்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டுவந்த கல்லூரி 2008ஆம் ஆண்டுமுதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று பல துறைகளில் பட்டப் படிப்புகளை வழங்கிவருகிறது

அமைவிடம்

இந்தியாவின் தமிழகத்தில் மதுரை, மேற்குப்புறநகர் பகுதியைச் சேர்ந்த திருப்பாலை கிராமத்தில் நத்தம் சாலையில் ஊமச்சிகுளம் அருகே அமைந்துள்ளது.

முதல்வர்கள்

  1. தி. அ. சொக்கலிங்கம் (1969 முதல் 1978 வரை)
  2. மு. தமிழ்க்குடிமகன் (1978 முதல் 1989 வரை)
  3. க. திருவாசகம்
  4. எசு. தனசேகரன்
  5. வி.சம்பத்
  6. பி.அழகேசன்

முன்னாள் மாணவர்கள்

  • க. திருவாசகம், சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர்.

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.