மோய் சாய் மாவட்டம்

மேய் சாய் மாவட்டம் (Mae Sai) (தாய்: แม่สาย, தாய்லாந்து நாட்டின் வடக்கில் உள்ள சியாங் ராய் மாகாணத்தின் வடகோடியில், தாய்லாந்து - மியான்மர் பன்னாட்டு எல்லையில் அமைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மோய் சாய் நகரம் ஆகும். பன்னாட்டு ஆசிய நெடுஞ்சாலை 2, மாயி சாய் நகரத்தின் வழியாக மியான்மருக்குச் செல்கிறது. 285 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 2005ல் 86,298 ஆக இருந்தது.

மேய் சாய் மாவட்டம்
แม่สาย
மாவட்டம்
மோய் சாய் நகரத்தின் மியான்மர் - தாய்லாந்து பாலம்

தாய்லாந்ந்து நாட்டின் சியாங் ராய் மாகாணத்தில் அமைந்த மோய் சாய் மாவட்டம்
ஆள்கூறுகள்: 20°25′41″N 99°53′1″E
மாகாணம்சியாங் ராய் மாகாணம்
தலைமையிடம்மோய் சாய்
பரப்பளவு
  மொத்தம்285.0
மக்கள்தொகை (2005)
  மொத்தம்86
  அடர்த்தி302.8
நேர வலயம்UTC+07:00 (ஒசநே+7)
அஞ்சல் சுட்டு எண்57130
புவியியற் குறியீடு5709

தங்க முக்கோணத்தில் அமைந்த மோய் சாய் மாவட்டம், சியாங் ராய் மாகாணத் தலைமையிடமான சியாங் ராய் நகரத்திற்கு வடக்கில் 259 கிமீ தொலைவிலும், தேசியத் தலைநகரமான பாங்காக்கிற்கு வடக்கே 850 கிமீ தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. [1]

இம்மாவட்டத்தில் உள்ள தோய் நாங் நோன் மலைத்தொடரில் உள்ள தாம் இலுவாங் நாங் நோன் குகையில் 23 சூன் 2018 அன்று 12 சிறுவர்களும், ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளரும் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை பன்னாட்டு மீட்பு குழுவினர் 10 சூலை 2018 குகையிலிருந்து மீட்டனர். [2]

சூன், 2018 அன்று தோய் நாங் நோன் மலைத்தொடரில் உள்ள தாம் இலுவாங் நாங் நோன் குகையில் சிக்கிய சிறுவர்கள்

நிர்வாகம்

நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் எட்டு துணை மாவட்டங்களாகவும், 92 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மோய் சாய் மற்றும் இரண்டு துணை மாவட்ட நகராட்சிகளையும் கொண்டது.

எண் துணை மாவட்டப் பெயர் தாய்: แม่สาย மொழியில் கிராமங்கள் மக்கள்தொகை     
1.மோய் சாய்แม่สาย1421,697
2.ஹுவாய் கிராய்ห้วยไคร้117,609
3.கோ சாங்เกาะช้าง139,964
4.போங் பாโป่งผา128,348
5.சி முயியாங் சும்ศรีเมืองชุม95,090
6.வியாங் பாங் காம்เวียงพางคำ1319,945
8.பான் தாய்บ้านด้าย84,117
9.பொங் நாம்โป่งงาม129,528

இதனையும் காண்க

மோய் சாய் மாவட்டத்தின் தோய் நாங் நோன் மலைத்தொடர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.