தாம் இலுவாங் நாங் நோன்
தாம் இலுவாங் நாங் நோன் (Tham Luang Nang Non, தாய்: ถ้ำหลวงนางนอน) வடக்கு தாய்லாந்தில், சியாங் ராய் மாகாணத்தின், மோய் சாய் மாவட்டத்தில் உள்ள போங் பா சிற்றூரருகே உள்ள தாம் இலுவாங்-குன் நாம் நாங் நோன் வனப்பூங்காவிலுள்ள சுண்ணக்கரட்டு குகையமைப்பாகும்.[2] இது மியான்மர் எல்லையில் உள்ள தோய் நாங் நோன் மலைத்தொடர் கீழே அமைந்துள்ளது.
தாம் இலுவாங் நாங் நோன் | |
---|---|
தாம் இலுவாங் தாம் நாம் சம் தாம் யெய் | |
![]() குகை நுழைவு - 2018இல் எடுக்கப்பட்டது | |
அமைவிடம் | தாம் இலுவாங்-குன் நாம் நாங் நோன் வனப்பூங்கா, மோய் சாய் மாவட்டம், சியாங் ராய் மாகாணம், தாய்லாந்து |
ஆயத்தொலைகள் | 20°22′54″N 99°52′06″E |
ஆழம் | 85 மீட்டர்கள் (279 ft) |
நீளம் | 10.3 கிலோமீட்டர்கள் (6.4 mi) |
உயரம் | 446 மீட்டர்கள் (1,463 ft) |
ஆபத்துகள் | பருவமழை வெள்ளம் |
அணுக்கம் | சுற்றுலாக் காலம் - நவம்பர் – சூன்) |
ஒளி அமைப்பு | இல்லை[1] |
இக்குகை சூலை 2, 2018 முதல் உலகளவில் பெரும் ஈர்ப்பைப் பெற்றது; இக்குகையில் இளையோர் காற்பந்தாட்ட அணியின் 12 சிறுவர்களும் அவர்களது உதவிப் பயிற்சியாளரும் குகையின் ஆழ்பகுதியில் சிக்கிக் கொண்டனர். சூன் 23, 2018 அன்று ஏற்பட்ட பருவமழை வெள்ளத்தால் இவ்வாறு சிக்கிக்கொண்டனர். சூலை 10 அன்று இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.[3] இம்முயற்சியில் தாய்லாந்தின் மீட்பு மூழ்காளர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "ถ้ำหลวงขุนน้ำนางนอน - เชียงราย" (Thai). Office of the Natural Resources and Environmental Policy and Planning (ONEP), Ministry of Natural Resources and Environment of Thailand. மூல முகவரியிலிருந்து 2018-07-05 அன்று பரணிடப்பட்டது.
- Ellis, Martin (2018). The Caves of Thailand. 2. Lulu. பக். 151–152. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-244-33343-0. https://books.google.com/books?id=9Gw_DwAAQBAJ&pg=PA151.
- தாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.