மோகன் ராமன்

மோகன் ராமன் (பிறப்பு மோகன் வெங்கட பட்டாபி ராமன், ஏப்ரல் 3, 1956) இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராவார். மேலாண்மைப் பயிற்றுனராகவும் பணி புரிந்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் துணை மற்றும் எதிர்மறை வேடங்களில் சிறப்பாக நடித்துப் பெயர் பெற்றுள்ளார். குறிப்பாக மர்மதேசம் (விடாது கறுப்பு), சிதம்பர ரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களால் பெரிதும் அறியப்பட்டவர். வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான வி. பி. ராமனின் மூத்த மகனாவார். தற்போதைய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி. எஸ். ராமனின் அண்ணன் ஆவார்.

மோகன் ராமன்
பிறப்புமோகன் வெங்கட பட்டாபி ராமன்
ஏப்ரல் 3, 1956 (1956-04-03)
பணிதொலைக்காட்சி, திரைப்பட நடிகர், மேலாண்மை பயிற்சியாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991-இன்றளவும்
வாழ்க்கைத்
துணை
பத்மா
பிள்ளைகள்விக்ரம்
வித்யுலேகா ராமன்

திரைப்படத்துறை

தொலைக்காட்சி

பின்வரிசையில் கண்ணாடி யணிந்துள்ள சிறுவன் மோகன் ராம்
தொலைக்காட்சித் தொடர்ஆண்டுவேடம்இயக்குனர்குறிப்புகள்
மர்மதேசம்1997–2001நாகா
காதல் பகடை1997-98கே. பாலச்சந்தர்
சிதம்பர ரகசியம்நாகாஎதி்ர்மறை வேடம்
சின்ன பாப்பா பெரிய பாப்பா2000–2005
ஆனந்தம்2005–2009சிறீநிவாசன்எதி்ர்மறை வேடம்
வைர நெஞ்சம்2007–2010
மாமா மாப்பிள்ளே2010–நடப்புநகைச்சுவை

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்வேடம்இயக்குனர்குறிப்புகள்
1991இதயம்கதிர்அறிமுகம்
1994மகாநதிசந்தான பாரதி
1994ஆனஸ்ட் ராஜ்கே. எஸ். ரவி
1995சப்சே படா கில்லாடிஇந்தி
1997ஒன்ஸ் மோர்எஸ். ஏ. சந்திரசேகர்
1997ஆஹாசுரேஷ் கிருஷ்ணா
1998அரிச்சந்திராசெய்யாறு ரவி
1999படையப்பாகே. எஸ். ரவிக்குமார்
2000கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்அப்பாசின் செயலர்ராஜீவ் மேனன்
2002தேவன்அருண் பாண்டியன்
2003அன்பே அன்பேமணிபாரதி
2003மாஜிக் மாஜிக் 3டிஊர் தலைவர்ஜோஸ் புன்னூஸ்
2007பெரியார்பி. ஆர். அம்பேத்கர்ஞான ராஜசேகரன்
2007நான் அவனில்லைசெல்வா
2008குசேலன்பி. வாசு
2009டிஎன் 07 ஏஎல் 4777லட்சுமிநாதன்
2009குரு என் ஆளுசெல்வா
2010இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்சிம்புத்தேவன்
2011பயணம்வெங்கட்ராமன்ராதா மோகன்
2011சபாஷ் சரியானப் போட்டிவேணு அரவிந்த்
2013ராமானுஜன்ஞான ராஜசேகரன்
2013சென்னை எக்ஸ்பிரஸ்ஊர் பூசாரிரோகித் செட்டிஇந்தி

உசாத்துணைகள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.