மைக்கேல் கிரைட்டன்

மைக்கேல் கிரைட்டன் (Michael Crichton, அக்டோபர் 23, 1942நவம்பர் 4, 2008) பல நூல்களை எழுதிய எழுத்தாளர். அவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், வைத்தியரும் ஆவார். திரைப்படத் தொடராக்கப்பட்ட யூராசிக் பார்க் நூலிற்காக இவர் நன்கறியப்படுகிறார். பிறே, லொஸ்ற் வேர்ல்ட் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார் கிரிச்ரன் ஈ. ஆர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் உருவாக்கியுள்ளார். அவர் 6'9" உயரமானவர். ஐந்து தடவை திருமணம் செய்த அவருக்கு நான்காவது திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. நவம்பர் 2008 இல், 66 வயதில் தொண்டைப் புற்றுநோயால் அவர் இறந்தார். அவரது இறப்பின் பின்னர் பெப்ரவரி 2009 இல் அவரது ஐந்தாவது மனைவி அவரது ஒரே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

மைக்கேல் கிரைட்டன்
Michael Crichton

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மைக்கல் கிரைட்டின்
(ஏப்ரல் 18, 2002)
பிறப்பு ஜோன் மைக்கேல் கிரைட்டன்
அக்டோபர் 23, 1942(1942-10-23)
சிக்காகோ, இலினோய், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு நவம்பர் 4, 2008(2008-11-04) (அகவை 66)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர் ஜோன் லாங்கி,
ஜெப்ரி அட்சன்,
மைக்கேல்ல் டக்லஸ்
தொழில் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
நாடு அமெரிக்கர்
கல்வி ஹார்வர்d கல்லூரி
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி
இலக்கிய வகை தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
1969 எட்கார் விருது
http://www.crichton-official.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.