மேலப்பாளையம்

மேலப்பாளையம் (ஆங்கிலம்: Melapalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இவ்வூர் கீழவீரராகவபுரம் என்று முன் காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது, மேலப்பாளையம் எனும் இந்தப் பகுதி திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது. இப்பகுதி பாளையங்கோட்டை பகுதியின் மேற்கில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.

இந்த பகுதியின் வடக்கு திசையில் திருநெல்வேலி சந்திப்பும் (சுமார் 5கி.மி), கிழக்கில் பாளையங்கோட்டையும் (சுமார் 4கி.மி) வடமேற்கில் நெல்லை நகரம் (சுமார் 5 கி.மி) பகுதியும் அமைந்துள்ளது. பாளையங்கோட்டை பாபநாசம் சாலை இவ்வூரின் வழியாகத்தான் கடந்து செல்கிறது. கன்னியாகுமரி நெல்லை பைபாஸ் சாலை இப்பகுதியை தொட்டுத்தான் செல்கிறது, மேலும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையமும் (சுமார் 1.5 கி.மில்) இப்பகுயில்தான் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகமும் நெருக்கமும் உள்ள ஊர் மேலப்பாளையம். இங்கே தலைமுறை தலைமுறையாயக நெசவுத் தொழில் இருந்து வந்தது ஆனால் பிற்காலத்தில் சுமார் 40 வருடங்களுக்கு முன் நெசவுத் தொழில் நலிவடைந்து தற்போதுவரை பிரதானமான தொழிலாக பீடி சுற்றுதல் இருந்து வருகிறது. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான பீடி தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இங்கேதான் அமைந்துள்ளது. பெண்கள் வீட்டில் அமர்ந்தபடியே பீடி சுற்றும் தொழிலை மேற்கொள்கிறார்கள்.

இங்கே வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கிறது அது போக பாளையங்கால்வாய் என்ற பெயர் கொண்ட வாய்க்காலும் விவசாய நீர்த்தேவைக்கும் வடிகாலாக அமைந்துள்ளது.

தெருக்களின் பட்டியல்

மேலப்பாளையத்தில் கீழாப்பாளையம், மேத்தமார் பாளையம், பஜார், கொடிமரம், வாய்க்கால் பாலம், நத்தம். குறிச்சி, கொட்டிகுளம், கருங்குளம், முன்னீர்பள்ளம், பீடிக்கம்பெனி காலனி, ஹாமீம்புரம், சந்தை, ரோஸ்நகர், தாய்நகர், ஹக் காலனி, ஹஜிரா நகர், கரீம்நகர், அமுதாபீட் நகர், ஞானியரப்பா நகர், பங்களாப்பா நகர், ரகுமானியாபுரம், வீரமானிக்கபுரம், குலவனிகர்புரம், சேவியர்ஸ் காலனி போன்ற பகுதிகள் அமைந்துள்ளது இங்கே ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளது.

இங்கு கீழாப்பாளையம் எனும் பகுதியில் அரசினர் மருத்துவமனையும், பெரிய தபால் நிலையமும் அமைந்துள்ளது. கொட்டிகுளம் எனும் பகுதியில் நூலகம் அமைந்துள்ளது, சந்தையிலிருந்து நெல்லை சந்திப்பு போகும் நேதாஜி சாலையில் மேலப்பாளையம் முனிசிபல் ஆபிஸ் அமைந்துள்ளது அதே சாலையில் மின்சார வாரிய அலுவலகமும் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. முனிசிபல் ஆபிஸின் தெற்கே பஜார் செல்லும் நேருஜி ரோட்டில் காவல் நிலையம் அமைந்துள்ளது அதனை ஒட்டியே நகராட்சி திருமண மண்டபமும்.மஸ்ஜீதூர்ரஹ்மான் பள்ளி(TNTJ) வாசல் அமைந்துள்ளது. சந்தை எனும் பகுதியில் மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைந்துள்ளது. ஹாமீம் புரம் பகுதியில் அன்னை ஹாஜிரா பெண்கள் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. மேலப்பாளையம் வாய்க்கால் பாலம்,எனும் பகுதியில்.முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.அமைந்துள்ளது

மருத்துவமனைகள் பட்டியல்

  • அரசு மருத்துவமனை (மகப்பேறு மருத்துவர்)
  • பயோலைன் இரத்த பரிசோதனை நிலையம் (LAB ASRAF) சந்தை
  • செல்வன் மருத்துவமனை (மகப்பேறு மருத்துவர்)
  • ஜெயக்குமார் மருத்துவமனை
  • இரத்தினசாமி மருத்துவமனை
  • விஜயா மருத்துவமனை
  • நிஜாம் மருத்துவமனை
  • பவுல் மருத்துவமனை
  • நூர் மருத்துவமனை
  • மீரான் மையம்
  • சார்லி பல் மருத்துவமனை (பல் மருத்துவமனை)
  • ஜே.கே. மருத்துவமனை (மகப்பேறு மருத்துவர்)
  • ரஹ்மான் மையம் (சுவாச மையம்)
  • புன்னகை பல் மருத்துவமனை (பல் மருத்துவமனை)
  • மஜித் பல் மருத்துவமனை
  • ஜூட் மருத்துவமனை
  • குறிச்சி புதிய பிறை மருத்துவமனை
  • அல்-நூர் மருத்துவமனை (சிறந்த குழந்தை சுகாதாரம்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.