மேட்லேப்

மேட்லேப் (MATLAB, MATrix LABoratory) என்பது எண்சார் பகுப்பியல் சூழலும் நான்காம் தலைமுறை நிரல் மொழியும் ஆகும். இது மேத்வர்க்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இதனால் அணியத்தைத் திறமையாகக் கையாளவும், தரவுகளையும் சார்பகளையும் செயற்படுத்தவும், படிமுறைத் தீர்வுகளை செயலாக்கவும், இடைமுகத்தினை உருவாக்கவும், ஏனைய நிரலாக்க மொழிகளான சி, சி++, ஜாவா, போர்ட்ரான் ஆகியவற்றில் எழுதப்பட்ட நிரல்களுடன் செயற்பட முடியும்.

MATLAB
உருவாக்குனர்மேத்வொர்க்ஸ்
அண்மை வெளியீடுR2012a / மார்ச்சு 1 2012 (2012-03-01)
மொழிசி, ஜாவா
இயக்கு முறைமைகுறுக்கு-அடிப்படை[1]
உரிமம்உரிமையாளருக்குரியது
இணையத்தளம்மட்லப் பக்கம்
'
நிரலாக்க கருத்தோட்டம்:பல நிரல்மொழி: கட்டளை, தொடர், பொருள் நோக்கு நிரலாக்கம், வரிசை நிரலாக்கம்
தோன்றிய ஆண்டு:1970களின் பின்
உருவாக்குநர்:கிளேவ் மோலர்
வளர்த்தெடுப்பு:மேத்வொர்க்ஸ்
இயக்குதளம்:குறுக்கு-அடிப்படை

மேட்லேப் ஒரு மில்லியன் பாவனையாளர்களை 2004 இல் கொண்டிருந்தது.[2] மேட்லேப் பாவனையாளர்கள் பொறியியல், அறிவியல், பொருளியல் துறைகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள். இது கல்விக்கழக, நிறுவன ஆராய்ச்சி மற்றும் தொழில் துறைகளில் பரவலாகப் பாவிக்கப்படுகிறது.

வரலாறு

1970களின் பின்பகுதியில் நியூ மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் கணினியியல் துறைத் தலைவர் கிளேவ் மோலரால் மேட்லேப் உருவாக்கம் தொடங்கப்பட்டது.[3]

சொற்றொடரியல்

மேட்லேப் பயன்பாட்டு மென்பொருள் மேட்லேப் நிரல் மொழியினால் அமைக்கப்பட்டது. இதன் அனேக ஈடுபாடு மேட்லேப் குறியீடுகளை கட்டளைச் சட்டத்தினுள் தட்டச்சு செய்தல் அல்லது மேட்லேப் குறியீடுகள் மற்றும் பணிமுறை நிரல் மொழிகளை கொண்ட TXT கோப்புக்களை செயலாற்றச் செய்தல்களில் தங்கியுள்ளன.[4]

மாறி

மாறிகள் வகுத்துத் தொகுத்தல் செயற்குறியால் வரையறுக்கப்பட்டன.

மாறிகள் உதாரணம்:

>> x = 17
x =
 17
>> x = 'hat'
x =
hat
>> y = x + 0
y =
       104        97       116
>> x = [3*4, pi/2]
x =
   12.0000    1.5708
>> y = 3*sin(x)
y =
   -1.6097    3.0000

வரைகலை மற்றும் வரைகலை பயனர் இடைமுக நிரலாக்கம்

மேட்லேப் வரைகலை பயனர் இடைமுகம் உடைய பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்கக் கூடியது. முப்பரிமாண வரைகலை இதன் மூலம் நன்றாக உருவாக்க முடியும்.

[X,Y] = meshgrid(-10:0.25:10,-10:0.25:10);
f = sinc(sqrt((X/pi).^2+(Y/pi).^2));
mesh(X,Y,f);
axis([-10 10 -10 10 -0.3 1])
xlabel('{\bfx}')
ylabel('{\bfy}')
zlabel('{\bfsinc} ({\bfR})')
hidden off
   
[X,Y] = meshgrid(-10:0.25:10,-10:0.25:10);
f = sinc(sqrt((X/pi).^2+(Y/pi).^2));
surf(X,Y,f);
axis([-10 10 -10 10 -0.3 1])
xlabel('{\bfx}')
ylabel('{\bfy}')
zlabel('{\bfsinc} ({\bfR})')
முப்பரிமாணத்திற்கு முந்திய வடிவம்:     முப்பரிமாணம்:
   

மேற்கோள்கள்

  1. "Requirements". MathWorks. பார்த்த நாள் 2010-06-07.
  2. Richard Goering, "Matlab edges closer to electronic design automation world," EE Times, 10/04/2004
  3. Cleve Moler, the creator of MATLAB (December 2004). "The Origins of MATLAB". பார்த்த நாள் April 15, 2007.
  4. "MATLAB technical documentation". Mathworks.com. பார்த்த நாள் 2010-06-07.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.