மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை
மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை (Methodist Girl's High School, Point Pedro) வட மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறையில் அமைந்துள்ள முன்னணி பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான இதுவொரு தேசியப் பாடசாலையாகும்.
மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை | |
---|---|
நிறுவல்: | 1823 |
வகை: | தேசியப் பாடசாலை |
சமயச் சார்பு: | கிறித்தவம் |
அமைவிடம்: | பருத்தித்துறை, இலங்கை ![]() |
இலங்கையில் நூற்றாண்டைக் கடந்த பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை 1823ம் ஆண்டில் உவெசுலிய மெதடிச மதப்பரப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையை ஆரம்பிப்பதில் வண. ஜேம் லியன்ச், தோமஸ் ஸ்வான் ஆகியோர் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இப்பாடசாலையின் தற்போதைய அதிபராக திருமதி சுந்தரரசன் பதவி வகிக்கின்றார். ஆங்கிலப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தமிழ்மொழியிலும் போதனைகள் நடைபெறுகின்றன.
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.