மெஞ்ஞானபுரம்

மெஞ்ஞானபுரம் (நெடுவிளை) தூத்துக்குடி மாவட்டத்தின் தென் பகுதியில் சாத்தான்குளத்திலிருந்து 10 கி.மீ கிழக்குத் திசையில் நாகா்கோவில் - திருச்செந்துாா் சாலையில் அமைந்துள்ளது. மேலும் இது நாசரேத் - உடன்குடி சாலையில் நாசரேத்திலிருந்து 11 கிமீ தெற்கில் அமைந்துள்ளது. இது மேகநாதபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. உடன்குடி அருகிலுள்ள நகரமாகும். அருகிலுள்ள இரயில் நிலையம் நாசரேத் இரயில் நிலையம் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் துாத்துக்குடி விமான நிலையமாகும். திருநெல்வேலி 41 கிமீ வடகிழக்கு திசையிலும், நாகர்கோவில் தென்மேற்குத் திசையில் 80 கிமீ தொலைவிலும் உள்ளது.

Megnanapuram
Neduvillai
village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Thoothukudi
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு648210
வாகனப் பதிவுTN-69
Nearest cityTiruchendur
Avg. summer temperature41 °C (106 °F)

இந்தியாவிலுள்ள பொிய தேவாலயங்களில் ஒன்றான செயிண்ட் பால் தேவாலயம் இங்கு அமைந்துள்ளது. மெஞ்ஞானபுரம் கனம் சி. டி.இ. ரேனியஸ் ஐயரவா்களின் உழைப்பினால் உருவான கிராமமாகும். மார்ச் 7, 1830 இல் ரேனியஸ் "நெடுவிளை" என்ற பெயரை "மெஞ்ஞானபுரம்" (உண்மையான ஞானம்) என மாற்றினாா்

1837-ல் மெஞ்ஞானபுரம் வந்திறங்கிய கனம் ஜான் தாமஸ், கிராமத்தை புதியதாக நிா்மாணித்ததுடன் தேவாலயத்தையும் வடிவமைத்தார். 1868 ஆம் ஆண்டில், 192 அடி உயரமுள்ள கோபுரம் கட்டப்பட்டது. திரு ஜான் தாமஸ் இறந்த பொழுது தேவாலயத்தின் ஒரு மூலையில் அடக்கம் செய்யப்பட்டாா். ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதத்தில் கடைசி வியாழக்கிழமை அசனப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு கிராமவாசிகள் மற்றும் கிராமவாசிகளின் உறவினர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்கின்றனர். அந்த நேரத்தில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். இது தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது.

காலநிலை

மழைக்காலம் மற்றும் குளிர்காலம் (செப்டம்பர்-ஜனவரி) மிகவும் இதமாக இருக்கும். கோடைகாலம் மிகவும் வெப்பமாக இருக்கும். மன்னார் வளைகுடா கடலிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இக்கிராம் அமைந்துள்ளதால் மாலையில் இதமான கடற்காற்று உடலை வருடிச்செல்லும்..

பொருளாதாரம்

இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கிய ஆதாரம் வேளாண்மை ஆகும். சடையனோி குளமும் சடையனோி கால்வாயும் நீர்ப்பாசனத்தின் ஒரே ஆதாரம் ஆகும். செம்மாிக்குளம் விவசாயிகள் சடையனோி கால்வாயில் நீரை அனுமதித்தால், 'படுகையில்' 'சட்டவிரோத' சாகுபடி செய்ய இயலாது. எனவே சடையனோி குளம் எப்போதும் வறண்டு வருகிறது. அண்மைய ஆண்டுகளில் பருவமழை பொய்த்து வருவதால் விவசாயம் செய்ய முடியாத மக்கள், மளிகை வியாபாரத்திற்காக நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். கல்வி மிகவும் அணுகக்கூடியதாக இருப்பதால், இளம் தலைமுறையினர் உலகம் முழுவதிலும் நல்ல வேலையில் உள்ளனா். 'சமையல்' தொழில் இங்கு மிகவும் புகழ்பெற்றது, சமையல் கலைஞா்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு போன்ற பெருநகரங்களுக்குக்கூட தொழிலுக்காகப் பயணம் செய்கின்றனா். 

கிராமம் மற்றும் ஆலயம் பற்றிய சமீபத்திய வரலாறு

நெடுவிளை கிராமக் கோவில் பூஜாரியின் மகனைப் பாம்பு ஒன்று கடித்து விட்டது, டி. டி. ரேனியஸ் (1790-1838) அவருக்கு மருத்துவ உதவி செய்ததால் அவன் உயிா் பிழத்தான். எனவே, அவா் உட்பட முழு கிராமமும் கிறித்துவத்திற்கு மாறியது. இந்து கோயில் இருந்த இடத்தில், ஜெர்மானிய பாணியிலான தேவாலயம் கட்டப்பட்டது.[1]

விளையாட்டு

கபடி விளையாட்டும், கைப்பந்து விளையாட்டும் மிகவும் பிரபலமானவை. மெஞ்ஞானபுரம் தேசிய அளவிலான பல கபடி விளையாட்டு வீரா்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஜாண் தாமஸ் கபாடி கழகம் திரு தியாகராஜ் அவா்களால் உருவாக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறது. கபடி விளையாட்டு கிராமத்தில் நடைபெறும் முக்கியமான விழா நாட்களில் விளையாடப்படும். இப்படி விளையாடிய பல் இன்று விளையாட்டுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் உயா் படிப்பு படிக்க இடம் கிடைத்து தற்போது பல அரசுத் துறைகளில் பணியாற்றுகின்றனா். [சான்று தேவை]

மேலும் 2016 ஆம் ஆண்டில் உவால்ஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் நிறுவப்பட்டது. இந்த கிளப் உருவாக அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஜோசப் ராஜ் மற்றும் அவரது வகுப்பு தோழர்கள் காரணமாயிருந்தனா்..

மேற்கோள் நுால்கள்

  1. Susan Billington Harper, In the shadow of the Mahatma: Bishop V.S.Azariah and the travails of Christianity in British India (WM.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.