முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்

முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் அல்லது பல்லேகலை பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் (Muttiah Muralitharan International Cricket Stadium) இலங்கையின் கண்டியில் புதியதாக உருவாக்கபட்டுள்ள ஓர் துடுப்பாட்ட அரங்கமாகும். நவம்பர் 27, 2009 அன்று அரங்கம் திறக்கப்படடது. இது இலங்கையின் புகழ்பெற்ற துடுப்பாட்ட சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நினைவாக சூலை 2010 அன்று, மத்திய மாகாண அவையின் முழுமையான ஒப்புதலுடன், மறுபெயரிடப்பட்டது.[1]

முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
Muralitharan International Cricket Stadium
பல்லேகலை
அரங்கத் தகவல்
அமைவிடம்பல்லேகலை, கண்டி மாவட்டம், மத்திய மாகாணம்
ஆள்கூறுகள்7°16′49″N 80°43′20″E
உருவாக்கம்நவம்பர் 27, 2009
இருக்கைகள்35,000
உரிமையாளர்இலங்கை துடுப்பாட்டம்
இயக்குநர்இலங்கை துடுப்பாட்டம்
குத்தகையாளர்மாகாணங்களிடை மட்டுப்படுத்திய துடுப்பாட்டடப் போட்டிகள்
மாகாணங்களிடை இருபது20 போட்டிகள்
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
முடிவுகளின் பெயர்கள்
உன்னசுகிரியா முனை
ரிக்கில்லாகசுகடக முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வுதிசம்பர் 1 2010:
 இலங்கை v  மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒநாப8 மார்ச் 2011:
 பாக்கித்தான் v  நியூசிலாந்து
அணித் தகவல்
கந்துரத துடுப்பாட்ட அணி (2009 – நடப்பில்)
As of 27 நவம்பர் 2010
Source: Cricinfo

இருப்பிடமும் பின்னணியும்

கண்டி நகரிலிருந்து அரைமணிநேரப் பயணத்தில் இந்த அரங்கம் அமைந்துள்ளது.[2] பல்லேகல அரங்கம் முழுமையும் இலங்கைத் துடுப்பாட்டத்திற்கு உரிமையானதாம். 1983ஆம் ஆண்டு முதல் 2007 வரை பன்னாட்டுப் போட்டிகள் நடந்த அசுகிரிய அரங்கத்திற்கு மாற்றாக இது அமையும். அரங்கத்தை அரசு பொறியியல் நிறுவனம் (State Engineering Corporation of Sri Lanka) கட்டியுள்ளது. இதன் வடிவமைப்பு தென்னாபிரிக்காவில் உள்ள சென்சுரியன் சூப்பர்பார்க் அரங்கத்தை ஒத்துள்ளது.

இந்த அரங்கமும் அம்பாந்தோட்டை அரங்கமும் 2011 உலகக்கிண்ணப்போட்டிகளுக்காக தயார் செய்யப்பட்டன. பல்லேகல கந்துரத துடுப்பாட்ட அணியின் அரங்கமும் ஆகும்.[3][4][5]

செய்தித்துளிகள்

  • முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் திசம்பர் 2010இல்உலகின் 104வது தேர்வு அரங்கமாக ஆனது.[6] முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே திசம்பர் 1-5 வரை நடந்தது.
  • இவ்விளையாட்டரங்கம் இலங்கையின் எட்டாவது தேர்வுத் துடுப்பாட்ட அரங்கமாகும்.
  • புதிய அரங்கில் தேர்வுத் துடுப்பாட்டமொன்றில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய பெருமை மேற்கிந்தியர் கிரிஸ் கெய்லை வெளியேற்றிய இலங்கையின் சுரங்க லக்மலுக்குக் கிடைத்தது. இவ்வாறு விக்கெட் வீழ்த்திய மற்ற இருவர்: இந்தியாவின் கபில்தேவ் மற்றும் பாக்கித்தானின் இம்ரான் கான் ஆவர்.[7]

மேற்கோள்கள்

  1. Cyril Wimalasurendre (July 27, 2010). "Pallekele Stadium to be named after Muralitharan". ISLAND CRICKET. பார்த்த நாள் November 27, 2010.
  2. Siddarth Ravindran (2010-08-23). "Pallekele readies itself for the big day". ESPN Cricinfo. பார்த்த நாள் 2010-12-05.
  3. How Sri Lanka's World Cup venues were chosen Cricinfo. Retrieved on 6 June 2010
  4. ICC happy with state of progress of Sri Lanka venues Cricinfo. Retrieved on 6 June 2010
  5. Sri Lanka World Cup venues on track – ICC Cricinfo. Retrieved on 6 June 2010
  6. Siddhartha Talya (2010-11-30). "Pallekele awaits its Test debut". ESPN Cricinfo. பார்த்த நாள் 2010-12-05.
  7. "Bravo’s 50 lifts WI to 134-2". BangaloreMirror.com (2010-12-01). பார்த்த நாள் 2010-12-05.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.