மின்வேதியியல்
மின்வேதியியல் (மின்னிரசாயனவியல், Electrochemistry) என்பது வேதியியலின் ஒரு பகுதியாகும். இது வேதிவினைகள் எவ்வாறு மின்னாற்றலால் நிகழ்கின்றன என்பதை முதன்மையாக ஆயும் இயல் ஆகும். குறிப்பாக மின்பகுப்பு, மின்கலம் ஆகிவற்றுக்கு அடிப்படையான வேதிவினைகளை மின்வேதியியல் ஆய்கின்றது.
ஆய்வு நிறுவனம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கும் காரைக்குடி நகரில் இந்திய அரசின் ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான மத்திய மின்வேதியியல் நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அறிவியற் சொற்கள்
- மின்கலம் - Battery
- வேதி வினை - Chemical Reaction
- மின்வேதி வினை - Electrochemical reaction
- மின்வாய் - Electrode
- நேர்மின்வாய் - Anode
- எதிர்மின்வாய் - Cathode
- செயல் மின்வாய் - Working electrode or Indicator electrode
- ஒப்பீடு மின்வாய் - Reference electrode
- எதிர்செயல் மின்வாய் - Counter electrode or Auxiliary electrode
- அயனி - Ion
- நேர்மின் அயனி - Cation
- எதிர்மின் அயனி - Anion
- மின்பகுப்பு - Electrolysis
- மின்பகுளி - Electrolyte
- உதவி மின்பகுளி - Supporting electrolyte
- மின்னழுத்தம் - Potential
- மின்னழுத்த வேறுபாடு - Potential difference
- மின்னோட்டம் - Current
- மின்னூட்டம் அல்லது மின்மம் - Charge
- மின்வேதிக் கலம் - Electrochemical cell
- ஆக்சிசனேற்றம் - Oxidation
- ஒடுக்கம் - Reduction (ஆக்சிசனேற்றம் பக்கத்தைப் பார்க்க)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.