மாளவிகாக்கினிமித்திரம்

மாளவிகாக்கினிமித்திரம் (Mālavikāgnimitram), மாளவிகா மற்றும் அக்கினிமித்திரன் என்பதின் சமசுகிருத மொழியின் கூட்டுச் சொல்லான மாளவிகாக்கினிமித்திரம் எனும் சமசுகிருத கவிதை நாடகத்தை இயற்றியவர் மகாகவி காளிதாசன் ஆவார். இது காளிதாசனின் முதல் நாடகப் படைப்பாகும். கவிதை வடிவிலான இந்நாடகம், விதிஷாவை தலைநகராகக் கொண்ட சங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் மாளவிகா எனும் பெண்னின் மீது கொண்ட காதலை விளக்குகிறது. [1]

நாடகக் கதைச் சுருக்கம்

சுங்கப் பேரரசரின் பட்டத்து ராணியின் பணிப்பெண் மாளவிகா மீது சுங்கப் பேரரசர் அக்கினிமித்திரன் காதல் கொண்டதை அறிந்த பேரரசி, மாளவிகாவை நாட்டை விட்டு கடத்துகிறார். பின்னர் மாளவிகா ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதை அறிந்த பேரரசி, மாளவிகாவை தனது கணவரான அக்கினிமித்திரனுக்கு மணமுடித்து வைக்கிறார்.

மேலும் இந்நாடகத்தில் புஷ்யமித்திர சுங்கன் செய்த இராசசூய வேள்வியையும், சுங்கப் பேரரசின் காலத்திய இசை மற்றும் நடிப்புக்கலையையும் விளக்குகிறது.

இதனையும் காண்க

மேலும் படிக்க

மேற்கோள்கள்

  1. Kalidas, Encyclopedia Americana

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.