மாலிப் பேரரசு

வரலாற்றில் மாண்டென் குருஃபாபா எனவும் அறியப்படும் மாலிப் பேரரசு 1230 - 1600 காலப்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவிய மாலின்கே/பம்பாரா/மாண்டின்கா/தியுலாப் பேரரசு ஆகும். சூன்யாத்தா கெயித்தா என்பவரால் நிறுவப்பட்ட இப்பேரரசு, இதன் ஆட்சியாளர்களின், குறிப்பாக மான்சா மூசாவின் செல்வத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டது. மாலிப் பேரரசே மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பேரரசு. பேரரசுக்கு அருகின் இருந்த பகுதிகளிலும், இதன் சிற்றரசுகள், மாகாணங்கள் என்பவற்றைக் கொண்டிருந்த பிற பகுதிகளிலும் தமது மொழி, சட்டங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பரவச் செய்ததன் மூலம் அப்பகுதிகளின் பண்பாட்டில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது.

மாலிப் பேரரசு
நியேனி  (பம்பாரா மொழி)
1230க்குப் பின்:
மாண்டே குருஃபாபா  (பம்பாரா மொழி)[1]

 

c. 1235–c. 1600
 

 

 

மாண்டே அமைவிடம்
மாலிப் பேரரசின் அளவு (c. 1350)
தலைநகரம் நியானி; பின்னர் கா-பா
மொழி(கள்) மலின்கே, மாண்டின்கா, பூலானி, போசோ
சமயம் ஆப்பிரிக்க மரபுவழிச் சமயம், இசுலாம்
அரசியலமைப்பு பேரரசு
மான்சா (பேரரசர்)
 -  1235–1255 மாரி ஜாத்தா I (முதல்)
 - c. 17ம் நூற்றாண்டு மகுமூத் IV (இறுதி)
சட்டசபை குபாரா
வரலாற்றுக் காலம் பின்செந்நெறிக்காலம்
 - உருவாக்கம் c. 1235
 - தலைநகரம்
நியானியிலிருந்து
கங்கபாவுக்கு
மாற்றப்பட்டது
1559
 - நாடு சிதைவுற்றுப்
பேரரசரின்
மகன்களிடையே
பிரிக்கப்பட்டது
c. 1600
பரப்பளவு
 - 1250[2] 1,00,000 km² (38,610 sq mi)
 - 1312[3] 12,94,994 km² (5,00,000 sq mi)
 - 1380[2] 11,00,000 km² (4,24,712 sq mi)
 - 1500[2] 4,00,000 km² (1,54,441 sq mi)
நாணயம் தங்கத்தூள்
(உப்பு, செப்பு, cowries போன்றனவும் பேரரசில் பொதுவாகப் புழங்கின)
தற்போதைய பகுதிகள்  கம்பியா
 கினியா
 கினி-பிசாவு
 ஐவரி கோஸ்ட்
 மாலி
 மூரித்தானியா


 நைஜர்
 செனிகல்

தேசியச் சின்னம்: பல்கன்
புனித விலங்கு:பல்கனும் ஆளும் குலக்குழுவைப் பொறுத்து ஏராளமான பிற விலங்குகளும் (சிங்கம் முதலியன)
Warning: Value specified for "continent" does not comply

சகாராவில் உள்ள பாறை ஓவியங்கள், சகாரா வளமாகவும் காட்டு விலங்குகள் நிறைந்தும் விளங்கிய கிமு 10,000 காலப்பகுதியிலேயே வடக்கு மாலியில் குடியேற்றங்கள் இருந்ததைக் காட்டுகிறது. கிமு 300 ஆண்டுக் காலப்பகுதியில், பெரிய ஒழுங்கு முறைப்பட்ட குடியேற்றங்கள், குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகப்பழைய நகரமான ஜென்னேக்கு அருகில் உருவாகின. கிபி 6ம் நூற்றாண்டளவில், பொன், உப்பு, அடிமைகள் ஆகியவற்றின் இலாபம் தருகின்ற சகாரா ஊடான வணிகம் தொடங்கியது. இது மேற்கு ஆப்பிரிக்காவின் பேரரசுகள் தோன்ற வழிவகுத்தது.

மேற்கோள்கள்

  1. Piga, Adriana: Islam et villes en Afriqa au sud du Sahara: Entre soufisme et fondamentalisme, p. 265. KARTHALA Editions, 2003.
  2. Taagepera, p. 497.
  3. Hempstone, p. 312.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.