மாலன்

மாலன் என அறியப்படும் மாலன் நாராயணன் (பிறப்பு: செப்டம்பர் 16, 1950) நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும் ஆவார். திசைகள் என்ற இணையம் வழிச் சஞ்சிகையின் ஆசிரியர். புதிய தலைமுறை என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பாக இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணித் தமிழ் இதழ்களிலும், சன் செய்தித் தொலைக்காட்சியின்

மாலன்
பிறப்புமாலன் நாராயணன்
செப்டம்பர் 16, 1950 (1950-09-16)
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்தமிழன், நசிகேதன்
கல்விஇதழியல்துறையில் பட்டம்
பணிஇதழாசிரியர்,
புதிய தலைமுறை
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்வி. எஸ். வி. மணி, லலிதா
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதி
பிள்ளைகள்சுகன்
உறவினர்கள்4 சகோதரர்கள், 2 சகோதரிகள்
வலைத்தளம்
www.maalan.co.in

ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

1950ம் ஆண்டு தமிழ்நாடு, ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த மாலன் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன இவர், 1970 - 1985 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வெளியான இலக்கியச் சிற்றேடுகள் அனைத்திலும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியவர். கணையாழி ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பங்களித்தார். மாலன் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றவர்.

இதழியல் பணிகள்

1981ல் 'திசைகள்' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சன்நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியராகப் பணியாற்றினார். ஒருங்குறி எழுத்துருவில் அமைந்த முதல் தமிழ் இணைய இதழான 'திசைகள்' இதழின் ஆசிரியர். கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார்.

இந்தியப் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ஆகியோருடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டவர். முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

எழுத்துப் பணி

இவரது சிறுகதைகள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழகத்திலுள்ள சில பல்கலைக்கழகங்களில் நான்கு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் அரசு நிறுவனமான சிங்கப்பூர் தேசியக் கலைமன்றம் ஆதரவில் நடைபெறும் எழுத்தாளர் வார நிகழ்ச்சிக்கும்,

சாகித்ய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் அவசர நிலைக்கு எதிராக இவர் எழுதிய கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டஃப்ட் பல்கலைக் கழக அமெரிக்கப் பேராசிரியர் ஆலிவர் பெரி தொகுத்த ஒரு நூலில் (Voices of Emergency) இடம் பெற்றுள்ளது. இவரது சிறுகதைகள் சீனம், மலாய் மொழிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, டெக்கான் ஹெரால்ட், இந்தியா டுடே (மலையாளம்), மாத்ருபூமி (மலையாளம்), விபுலா (இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. கல்கத்தாவில் உள்ள எழுத்தாளர்கள் பயிலரங்கு (Writers Workshop) தனது ஆங்கிலத் தொகுப்பில் இவரது கதைகளை வெளியிட்டிருக்கிறது.

இணைய பங்களிப்புகள்

திசைகள் - திசைகள் முதலில் 1981 ஜனவரியில் அச்சில் வார இதழாக வந்தது. 2003-ல் இணையத்தில் மின் இதழாக வந்தது. அது ஒரு வாசகசாலை.[1]

அக்ஷர - 24 மொழிகளில் ஒரு இணைய இதழ். akshra - Multilingual Online Journal for Indian Writing.இந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ். சமகால இந்திய இலக்கியத்தை அந்தந்த மொழிகளின் வரி வடிவங்களிலேயே இந்திய மொழிகள் இருபத்தி நான்கிற்கும் இடமளித்துள்ளது 'அக்ஷர'.[2]

வெளியிணைப்புக்கள்

  1. www.thisaigal.in
  2. http://www.akshra.org/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.