இரா. சு. மனோகர்

இரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

இராமசாமி சுப்ரமணிய மனோகர்
ஆர். எஸ். மனோகர் 1951
பிறப்புலட்சுமி நாராயணன்[1]
29 ஜூன் 1925
நாமக்கல், தமிழ் நாடு
இறப்புசனவரி 10, 2006(2006-01-10) (அகவை 80)
சென்னை
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
சீதாலட்சுமி மனோகர்

இளமைக்காலம்

இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதி தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும்.[2] இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள்

நாடகங்கள்

மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

விருதுகள்

இசைப்பேரறிஞர் விருது, 1987. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.