மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம்

மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் (Mattala Rajapaksa International Airport) இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது அம்பாந்தோட்டை பன்னாட்டு விமான நிலையம் எனவும் அழைக்கப்படுகிறது.[1] தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வானூர்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2009ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அம்பாந்தோட்டையில் புகழ்பெற்ற ராசபக்ச குடும்பத்தின் நினைவாக இவ்வானூர்தி நிலையத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம்
මත්තල රාජපක්ෂ ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ
Mattala Rajapaksa International Airport
ஐஏடிஏ: HRIஐசிஏஓ: VCRI
HRI
இலங்கையில் வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் இலங்கை அரசு
இயக்குனர் Airport and Aviation Services (Sri Lanka) Ltd
சேவை புரிவது அம்பாந்தோட்டை
அமைவிடம் மத்தல, அம்பாந்தோட்டை, இலங்கை
மையம்
ஆள்கூறுகள் 06°17′24″N 81°07′01.2″E
இணையத்தளம் www.mria.lk
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
05/23 3 11,483 அஸ்பால்டு

இது ஆரம்பத்தில் தென்னிலங்கை மக்களுக்காக வீரவில என்ற இடத்தில் கட்டப்படவிருந்தது. ஆனாலும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் கைவிடப்பட்டு அம்பாந்தோட்டையின் வடக்கே 15 கிமீ தொலைவில் உள்ள மத்தல என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. $209 மில்லியன் செலவில்[2] முதலாவது கட்டம் நவம்பர் 2009 இல் ஆரம்பிக்கப்பட்டது. 2013 மார்ச் 18இல் இலங்கையின் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் இது அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[3]

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

மத்தளை உலங்குவானூர்தி நிலையம் மூலம் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக விமானங்களில் பறவைகள் மோதி உயிரிழக்கும் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கதாகும். இதைவிட வன விலங்குகள் மற்றும் பறவைகள் விமான நிலையத்தை அண்டாது தடுக்க நீர் நிலைகள் மூடிவைக்கப்பட்டுள்ளது[4].

நெற்களஞ்சியம்

தற்போது ஃபிளை துபாய் என்கிற ஒரே ஒரு விமான நிறுவனம் மட்டுமே இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறது. எனவே அதிக பயன்பாடின்றி கிடக்கும் இவ்விமான நிலையத்தின் கிட்டங்களை நெற்களஞ்சியங்களாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு, இவ்விமான நிலையத்தில் நெல் மூட்டைகளை சேமித்து வைத்துள்ளது. [5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.