மதிலுகள்

மதிலுகள் (Walls) (1989) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படமாகும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மம்முட்டி, முரளி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மதிலுகள்
இயக்கம்அடூர் கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புஅடூர் கோபாலகிருஷ்ணன்
கதைஅடூர் கோபாலகிருஷ்ணன்
வைகொம் முகமது பாஷீர் (நாவல்)
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புமம்முட்டி
முரளி
கரமன்ன ஜனார்த்தனன் நாயர்
கிருஷ்ணன் குட்டி நாயர்
அஸீஷ்
ஒளிப்பதிவுமங்கட ரவி வர்மா
படத்தொகுப்புஎம்.மணி
வெளியீடு1989
ஓட்டம்120 நிமிடங்கள்
மொழிமலையாளம்

கதை

இந்தக் கதை முழுக்க முழுக்க சிறைச்சாலை வளாகத்தில் நடப்பதாக உள்ளது. இக்கதையின் நாயகன் ஒரு சிறைக்கைதி நாயகியும் ஒரு கைதிதான் ஆண் கைதிகளையும், பெண்கைதிகள் இருக்கும் சிறையை ஒரு மதில் சுவர் பிரித்திருக்கும். அதிகாலை தூக்கிலிடப்படப் போகும் கைதிக்குத் தேநீர் வேண்டுமென்று ஒரு சிறைக் காவலர் இவரின் சிறைக் கம்பிகளைத் தட்டிக் கேட்கிறார். உடனே எழுந்து தேநீர் போட்டுக் கொடுப்பதோடு அவர் மனநெருக்கடியைக் குறைக்க தன்னிடமிருந்து ஒரு பீடியையும் எடுத்துக்கொடுப்பார்.

தினந்தோறும் இவரின் உரையாடல்களைக் கேட்டுச் சிரிக்கும் ஆயுள்தண்டனை பெற்ற பெண்ணொருத்தியின் குரலும், ஆண்கள் சிறையின் மதிலுக்கு அப்பால் உள்ள பெண்கள் சிறையில் இருந்து ஒலிக்கும். இவர் `யாரது?’ என்று கேட்க, இப்படியாக அவர்கள் உரையாடல் தொடர நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குரல்களின் வழியே இருவருக்கும் இடையிலான நட்பு தழைக்கும். அவர்கள் சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்துக்கொள்ள இருந்த நேரத்தில், நாயகனான மம்முட்டிக்கு விடுதலை கிடைக்கப் போகும் செய்தியைச் சொல்வார் ஒரு சிறைக் காவலர். அவரிடம், `யாருக்கு வேண்டும் விடுதலை?’ என்பார் மம்முட்டி.

மதிலுக்கு அந்தப் பக்கம் இருந்த பெண்ணை இயக்குநர் கடைசி வரை நமக்குக் காட்டவே மாட்டார். ஆனால் நாயகன் விடுதலையானது தெரியாமல் மதிலுக்கு அப்பால் வழக்கம்போல அந்தப் பெண் அங்கு வருவதை குறிப்பாக இயக்குநர் காட்டுவார். இத்துடன் திரைப்படம் நிறைவடையும்.[1]

விருதுகள்

1990 வெனிஸ் திரைப்பட விழா (இத்தாலி)

  • வென்ற விருது - FIPRESCI பரிசு - அடூர் கோபாலகிருஷ்ணன்
  • வென்ற விருது - Unicef விருது - அடூர் கோபாலகிருஷ்ணன்

1990 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - தங்கத் தாமரை விருது - சிறந்த இயக்குநர் - அடூர் கோபாலகிருஷ்ணன்
  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த நடிகர் - மம்முட்டி
  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த ஒலிப்பதிவு
  • வென்ற விருது - வெண்தாமரை விருது - சிறந்த வட்டாரத் திரைப்படம்

1990 அமியென்ஸ் சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் (பிரான்ஸ்)

  • வென்ற விருது - OCIC விருது - அடூர் கோபாலகிருஷ்ணன்

2002 ஔபெர்விலேர்ஸ் சர்வதேச சிறுவர் திரைப்பட விழா (பிரான்ஸ்)

  • வென்ற விருது - Grand பரிசு - அடூர் கோபாலகிருஷ்ணன்

வெளியிணைப்புகள்

  1. "மதிலுகள்: ஆற்றாமையின் மவுன மொழி". தி இந்து (தமிழ்) (22, ஏப்ரல், 2016). பார்த்த நாள் 22 ஏப்ரல் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.