மக்னோலியா கிராண்டிஃபுளோரா

மக்னோலியா கிராண்டிஃபுளோரா ( Magnolia grandiflora ) என்பது ஒரு மரமாகும் இது Magnoliaceae என்ற குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இதன் தாயகம் ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான வடக்கு கரோலினா மாகாணத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் இருந்து நடு புளோரிடா, கிழக்கு டெக்சாசின் மேற்குப்பகுதி, ஓக்லஹோமா மாகாணங்களில். கடல்மட்டத்தில் இருந்து 27.5 மீ (90 அடி) உயரம்வரையான பகுதிகளில் காணப்படுகிறன. இந்த மரம் 120 அடி (37 மீட்டர்) உயரம்வரை வளர்கிறது. இம்மரத்தின் அடிமரம் நீண்டு உயர்ந்து கிளைகளுடன் பட்டைக்கூம்பு வடிவில் வளருகிறது.[1] இது கரும் பச்சை இலைகளுடன், பசுமையான மரமாகும். இதன் இலைகள் 20 செ.மீ (7.9 அங்குலம்) நீண்டதாகவும், 12 செ.மீ. (4.7 அங்குலம்) அகலமும் கொண்டதாக இருக்கின்றன. இதன் பூக்கள் பெரியதாகவும், வெள்ளை நிறத்திலும், மணம் உள்ளதாகவும் உள்ளன இந்த பூக்கள் 30 செ.மீ. (12 அங்குலம்) விட்டம் உடையனவாகவும் உள்ளன. சுமார் 9.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட இந்தத் தாவர இனத்தின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆராய்ந்தபோது டைனோசர் வாழ்ந்த காலத்தில், இந்தத் தாவர இனமும் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. டைனோசர்கள் பூமியிலிருந்து அழிந்துவிட்டாலும், இந்தத் தாவர இனம் அழியாமல் தப்பியிருக்கிறது. என்பது இத்தாவரத்தின் சிறப்பு. இம்மம் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தாவரவியல் பூங்காவில் காணப்படுகிறது.[2]

மக்னோலியா கிராண்டிஃபுளோரா
Southern magnolia
Magnolia grandiflora (southern magnolia)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Magnoliids
வரிசை: Magnoliales
குடும்பம்: Magnoliaceae
பேரினம்: Magnolia
துணைப்பேரினம்: M. subg. Magnolia
பிரிவு: M. sect. Magnolia
இனம்: M. grandiflora
இருசொற் பெயரீடு
Magnolia grandiflora
L

மேற்கோள்கள்

  1. Zion, Robert L. (1995). Trees for architecture and landscape. New York: Van Nostrand Reinhold. பக். 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-28524-3. https://books.google.com/books?id=aaKTWJG4-iQC&pg=PA224&.
  2. "ஏற்காட்டின் பசுமை அற்புதங்கள்". தி இந்து (தமிழ்) (செப்டம்பர், 5, 2015). பார்த்த நாள் 25 ஏப்ரல் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.