ஏற்காடு தாவரவியல் பூங்கா
ஏற்காடு தாவரவியல் பூங்கா என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உள்ள ஒரு தாவரவியல் பூங்கா ஆகும்.[1]
ஏற்காடு தாவரவியல் பூங்கா
பூங்கா விவரம்
இந்தப் பூங்கா பத்து ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 1100 வகையான தாவரங்கள் உள்ளன. இதில் 60 தாவரங்கள் உலகில் அழியும் தருவாயில் உள்ள அரிய தாவரங்கள் ஆகும். 180 ஆர்கிட் தொற்றுத் தாவரவகைகள் உள்ளன. வேறெங்கும் காண இயலாத இந்த தாவரங்களை தாவரவியல் பயிலும் மாணவர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், மருந்தியல் கல்லூரி, சித்தமருத்துவ கல்லூரி, வனவியல் கல்லூரி மாணவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
- http://www.tamilnadutourism.org/tamil/salem.html
- "ஏற்காட்டின் பசுமை அற்புதங்கள்". தி இந்து (தமிழ்) (செப்டம்பர், 5, 2015). பார்த்த நாள் 25 ஏப்ரல் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.