மகுரியா

மகுரியா (நுபியன்: ⲇⲱⲧⲁⲩⲟ, Dotawo; கிரேக்கம்: Μακογρια, Makouria; அரபு மொழி: مقرة, al-Muqurra) இராச்சியம் அமைவிடம் தற்போதைய தெற்கு எகிப்து மற்றும் வடக்கு சூடான் பகுதியில் அமைந்திருந்தது. இந்த இராச்சியம் நைல் நதியின் கரையோரம் அமைந்த ஒரு முடியாட்சி பகுதி ஆகும். இதன் தலைநகரம் டங்கோலா ஆகும்.[2][3]

மகுரியா இராச்சியம்
ⲇⲱⲧⲁⲩⲟ

5-16 ஆம் நூற்றாண்டுகள்


மகுரியா இராச்சியத்தின் கொடி. அனைத்து இராச்சியங்களின் தகவல் புத்தகம் மூலமாக.

மகுரியா அமைவிடம்
மகுரியா இராச்சியம் எழுச்சி பெற்ற காலத்தில் அதன் ஆட்சி பகுதிகள்.(அண். 962-964)
தலைநகரம் டங்கோலா (1365 ஆம் ஆண்டு வரை)
கெபல் அட்டா (1365 ஆம் ஆண்டு முதல்)
மொழி(கள்) நுபியன்
கோப்டிக்
கிரேக்கம்[1]
சமயம்
  • பாரம்பரிய ஆப்பிரிக்க மதங்கள்
  • கிருத்துவம் (6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து)
அரசாங்கம் முடியாட்சி
அரசர்
 -  651-652 குவாலிடரன்ட் (அறியப்பட முதல் அரசர்)
 - 1463-1484 ஜோல் (அறியப்பட கடைசி அரசர்)
வரலாறு
 - உருவாக்கம் 5 ஆம் நூற்றாண்டு
 - டங்கோலா நகரம் அழிப்பு 1365
 - குலைவு 16 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில்
நாணயம் தங்க

சோலிடஸ் டிரிச்சம்

தற்போதைய பகுதிகள்  சூடான்
 எகிப்து
Warning: Value not specified for "continent"

எழுச்சி

6 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் கிருத்துவ மத மாற்றத்திற்கு பிறகு இந்த இராச்சியம் எழுச்சி அடைந்தது. ஆனால் 7 ஆம் நூற்றாண்டு பகுதியில் இஸ்லாம் இராணுவ படை எகிப்து நாட்டில் காலூன்றியது. 651 ஆம் ஆண்டு அரபு படை மகுரியாவைத் தாக்கியது.[4] ஆனால் மகுரியாவின் பதில் தாகுதல் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு வித்திட்டது. இது 13 ஆம் நூற்றாண்டு வரை இரு தரப்பினரும் அமைதியாக இருக்க உதவியது. 7 ஆம் நூற்றாண்டு பகுதியில் மகுரியா இராச்சியம் தனது அன்டை இராச்சியங்களான வடக்கே நோபாடியாவுடனும், தெற்கே அலோடியாவுடனும் நல்லுறவை பெற்று பலமான இராச்சியமாக இருந்தது.[5]

கலை வளர்ச்சி

9-11 ஆம் நூற்றாண்டு பகுதியில் மகுரியா அபார வளர்ச்சி கண்டது. இந்த காலகட்டத்தில் கலாச்சாரம், மொழி, கட்டடக்கலை, சுவர் ஓவியக்கலை முதலியன வளர்ச்சி கண்டது.[6]

வீழ்ச்சி

எகிப்தியர்களின் ஆக்ரோசமான தாக்குதல், இஸ்லாமிய இனக்குழுக்களின் ஊடுருவல் மற்றும் பிளேக் நோய் தாக்குதலால் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டு பகுதியில் மகுரியா இராச்சியம் வீழ்ச்சி அடைந்தது. 1365 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போர் மூலம் இராச்சியதின் தென் பகுதியை இழந்தது. தலைநகரான டங்கோலா அழிக்கப்பட்டது. 1560 ஆண்டு பகுதியில் உதுமானியப் பேரரசு ஆட்சியின் கீழ் இப் பகுதி வந்தது. இதனால் இங்கு இஸ்லாம் மத மாற்றம் ஏற்பட்டது.[7]

மேற்கோள்கள்

  1. Welsby 2002, பக். 236-239.
  2. Werner 2013, பக். 39.
  3. Edwards 2004, பக். 182.
  4. Shinnie 1965, பக். 266.
  5. Adams 1977, பக். 257.
  6. Godlewski 1991, பக். 253-256.
  7. Ruffini 2012, பக். 256.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.