குஷ் இராச்சியம்

குஷ் இராச்சியம் இன்றைய சூடான் குடியரசில், நீல நைல், வெள்ளை நைல், அத்பாரா ஆறு என்பவற்றின் சங்கமப் பகுதியில் இருந்த பண்டைக்கால ஆப்பிரிக்காவின் இராச்சியம் ஆகும். வெண்கலக் காலத்தின் வீழ்ச்சியையும், புதிய எகிப்து இராச்சியத்தின் சிதைவையும் தொடர்ந்து உருவான இவ்விராச்சியம் தொடக்கத்தில் நப்பாத்தாவை மையமாகக்கொண்டு அமைந்திருந்தது. கிமு 8 ஆம் நூற்றாண்டில் அரசர் கசுத்தா எகிப்தைக் கைப்பற்றிய பின்னர், குஷ் வம்ச அரசர்கள் எகிப்தின் 25 ஆவது வம்சத்தின் பாரோக்களாக இருந்து, கிமு 656ல் முதலாம் சாம்டிக்கினால் வெளியேற்றப்படும்வரை, ஒரு நூற்றாண்டு ஆட்சி செய்தனர்.

குஷ் இராச்சியம்
Kuluš

கிமு 1070–கிபி 350
 

 

குஷ் அமைவிடம்
தலைநகரம் கேர்மா; நப்பாத்தா; பின்னர் மேரோ
மொழி(கள்) மேரோய்டியம், நுபியன்
சமயம் நூபிய மதம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாறு
 - உருவாக்கம் கிமு 1070
 - தலைநகரம் நப்பாத்தாவுக்கு மாறியது கிமு 780
 - தலைநகரம் மேரோவுக்கு மாறியது கிமு 591
 - குலைவு கிபி 350
மக்கள்தொகை
 -  எகிப்து காலகட்டம்[1] est. 1,00,000 
 -  மேரோ காலகட்டம்[1] est. 1 
தற்போதைய பகுதிகள்  எகிப்து
 சூடான்
Warning: Value specified for "continent" does not comply

செந்நெறிக் காலத்தில் குஷ் இராச்சியத்தின் தலைநகரமாக மேரோ இருந்தது. தொடக்ககால கிரேக்கப் புவியியலில் மேரோ சார்ந்த இராச்சியம் எத்தியோப்பியா என அறியப்பட்டது. மேரோவைத் தலைநகரமாகக் கொண்ட குஷ் இராச்சியம் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. இதன் பின்னர் உட்குழப்பங்களினால் பலமிழந்து சிதைந்துவிட்டது.

கிபி முதலாம் நூற்றாண்டளவில் குஷ் இராச்சியத்தின் தலைநகரம் பேசா வம்சத்தினரால் கைப்பற்றப்பட்டது இவர்கள் பேரரசை மீள்வித்தனர். பின்னர், குஷ் இராச்சியத் தலைநகரம் அக்சும் இராச்சியத்தினால் கைப்பற்றப்பட்டு எரித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Peter Stearns, தொகுப்பாசிரியர் (2001). "(II.B.4.) East Africa, c. 2000–332 B.C.E.". The Encyclopedia of World History: Ancient, Medieval, and Modern, Chronologically Arranged (6th ). Boston: Houghton Mifflin Harcourt. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-395-65237-4. http://books.google.com/books?id=MziRd4ddZz4C&pg=PA32.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.