பொதுக் கல்லீரற் கான்

பொதுக் கல்லீரற் கான் (common hepatic duct) [1] என்பது கல்லீரலில் இருந்து பித்தநீரை எடுத்துச்செல்லும் இடது கல்லீரற் கான் மற்றும் வலது கல்லீரற் கான் ஆகியன இணைந்து உருவாகும் உடற்கூற்றியல் அமைப்பாகும். பொதுக் கல்லீரற் கான் பித்தப்பையில் இருந்து வெளிச்செல்லும் பித்தப்பைக்கானுடன் சேர்ந்து பொதுப் பித்தக்கான் எனும் நாளக்கான் அமைப்பை உருவாக்குகிறது. வயது வந்தவர்களில் பொதுவாக இந்தக் கானின் நீளம் 6–8 செ.மீ, விட்டம் 6 மி.மீ.[2]

பொதுக் கல்லீரற் கான்
1: வலது கல்லீரற் சோணை
2: இடது கல்லீரற் சோணை
3: நீள்சதுரக் கல்லீரற் சோணை
4: கல்லீரல் வட்டக் கட்டுநாண்
5: அரிவாளுருக் கட்டுநாண்
6: கல்லீரல் வாற்சோணை
7: கீழ்ப் பெருநாளம்
8: பொதுப் பித்தக்கான்
9: கல்லீரல் நாடி
10: வாயினாளம்
11: பித்தப்பைக்கான்
12: பொதுக் கல்லீரற் கான்
13: பித்தப்பை
விளக்கங்கள்
இலத்தீன்ductus hepaticus communis
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.1197
Dorlands
/Elsevier
d_29/12314882
TAA05.8.01.061
FMA14668
உடற்கூற்றியல்
1. பித்தக்கான்கள்: 2. உட்கல்லீரல் பித்தக்கான், 3. இடது, வலது கல்லீரல் கான்கள், 4. பொதுக் கல்லீரற் கான், 5. பித்தப்பைக் கான், 6. பொதுப் பித்தக்கான், 7. வாட்டரின் குடுவையம், 8. பெரும் முற்சிறுகுடல் முகிழ்ப்பு
9. பித்தப்பை, 10–11. வலது மற்றும் இடது கல்லீரல் சோணை. 12. மண்ணீரல்.
13. உணவுக்குழாய். 14. இரைப்பை. சிறுகுடல்: 15. முன்சிறுகுடல், 16. இடைச்சிறுகுடல்
17. கணையம்: 18: துணைக் கணையக் கான், 19: கணையக் கான்.
20–21: வலது, இடது சிறுநீரகம்.

மருத்துவ முக்கியத்துவம்

கல்லீரல்-பித்தப்பைத் தொகுதி கல்லீரலில் சுரக்கப்படும் சுரப்புகளை குடலுக்குக் கொண்டு செல்ல உதவும் உறுப்புகள், கான்கள் அடங்கிய தொகுதியாகும். பொதுக் கல்லீரற் கான் இதனுள் அடங்குகிறது. பித்தப்பை அகற்றப்பட்டவர்களில் இதன் தொழிற்பாடும் இது எடுத்துச்செல்லும் பித்தத்தின் அளவும் கூடுதலாக இருக்கும்.

அறுவைச்சிகிச்சையின் போது இது ஒரு முக்கிய அடையாளக்குறியாக விளங்குகின்றது. இது பித்தப்பையீரல் முக்கோண வெளியை பித்தப்பைக் கான், பித்தப்பை நாடி (அல்லது கல்லீரலின் கீழ் விளிம்புப் பகுதி) ஆகியனவற்றுடன் சேர்ந்து உருவாக்குகின்றது. அறுவைச்சிகிச்சையில் தவறுதலாக அங்கிருக்கும் அமைப்புகள் வெட்டப்படுதலைத் தடுக்க இந்த முக்கோணம் பற்றிய அறிவு உதவுகின்றது.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. கான் வாய்க்கால் என்பதற்கான இலங்கை வழக்கு
  2. Gray's Anatomy, 39th ed, p. 1228
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.