பொட்டு (திரைப்படம்)

பொட்டு (Pottu) [2019] தமிழில் வெளிவந்த திகில் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குநர் வடிவுடையான் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பரத் முக்கிய பாத்திரத்திலும், இவருடன் இனியா (நடிகை), நமிதா கபூர் (நடிகை), மற்றும் சிருஷ்டி டங்கே போன்றோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். சாலோம் ஸ்டுடியோவிற்காக ஜான் மாக்ஸ் தாயாரித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட சௌகார்பேட்டை என்ற திரைப்படத்தை பின்பற்றி பொட்டு படமாக்கப்பட்டுள்ளது (2016).[1] இப்படம் 2016 ஜனவரியில் தொடங்கப்பட்டு 8 மார்ச் 2019 அன்று வெளியிடப்பட்டது[2]. இது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 8 மார்ச் 2019 அன்று வெளியிடப்பட்டது[3] இந்தியில் பிந்தி என்ற பெயரில் டைமன்ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.[4].இப்படம் பல எதிர்மறையான விமர்சனங்களை எதிகொண்டது.[5]

பொட்டு
இயக்கம்வடிவுடையான்
தயாரிப்புஜான் மேக்ஸ்
கதைவடிவுடையான்
இசைஅம்ரேஷ் கணேஷ்
நடிப்புபரத்
இனியா (நடிகை)
நமிதா கபூர் (நடிகை)
சிருஷ்டி டங்கே
ஒளிப்பதிவுசர்வேஷ் முராரி
படத்தொகுப்புசதீஷ் சூர்யா
கலையகம்சாலோம் ஸ்டுடியோஸ்
வெளியீடு8 மார்ச் 2019
ஓட்டம்116 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

இத்திரைப்படம் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களான அர்ஜுன் (பரத்) மற்றும் நித்யாவைச்(சிருஷ்டி டங்கே) சுற்றி வருகிறது. பள்ளியில் அர்ஜுன் முதலிடத்தை மோசடியாகப் பெறுகிறார். ஆனால் நித்யா, ஒரு சிறந்த மாணவியாக இருந்தபோதிலும், இரண்டாவது இடத்ததையே பெறுகிறார். இருவரும் ஒரே கல்லூரியில் சேருகிறார்கள், அர்ஜுன் கல்லூரியில் சிறப்பாக செயல்படத் தவறியபோது, தனது கையை வெட்டி தற்கொலைக்கு முயற்சிக்கிறான். பொட்டுவின் கல்லறையில் அவனது இரத்தம் சிந்தும்போது ஏற்படும் விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் ஒரு மர்மமான சக்தி அவனது உடலில் நுழைகிறது, அது ஒரு பெண்ணைப் போல நடந்து கொள்ளும்படி அவனைத் தூண்டுகிறது. பின்வருபவை பொட்டுவின் இனியா (நடிகை) பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்த்து விடுவதும், பொட்டு விரும்பியது நடந்ததும் ஆகும்.

நடிகர்கள்

பரத் அர்ஜுனாக
இனியா (நடிகை) பொட்டுவாக
நமிதா கபூர் (நடிகை) பிரமேஸ்வரியாக
சிருஷ்டி டங்கே நித்தியாவாக
ஊர்வசி அர்ஜுனின் தாயாராக
தம்பி ராமையா அர்ஜுனின் தந்தையாக
சகீலா - பேராசியர்
நிரோஷா பேராசியர்
இராசேந்திரன் (நடிகர்)
மன்சூர் அலி கான்
பரணி
சாயாஜி சிண்டே
சுவாமிநாதன்
நிகேஷ் ராம்
ஆர்யான்
காளிதாசன்
ரவிராஜ்
பாவா லக்‌ஷ்மணன்
பயிவான் ரங்கநாதன்
வி. எம். சுப்புராஜ்
பாபி
சிஸர் மனோகர்
வெங்கல் ராவ்

தயாரிப்பு

தயாரிப்பாளர்கள் ஜோன்ஸ் மற்றும் ஜான் மேக்ஸ் ஆகியோர் இந்த திட்டத்தை நவம்பர் 2015 இல் அறிவித்தனர், மேலும் அவர்கள் இயக்குனர் வடிவுடையானுடன் ஒரு திகில் படத்தில் பணியாற்றுவதாக வெளிப்படுத்தினர்.இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட சௌகார்பேட்டை என்ற திரைப்படத்தை பின்பற்றி பொட்டு படமாக்கப்படுள்ளது(2016).[6][7] இத்திரைப்படம் ஜனவரி 2016 இனியா (நடிகை), நமிதா கபூர் (நடிகை), மற்றும் மனிஷா யாதவ் ஆகியோரை முக்கிய பாத்திரத்தில் நடிக்க சென்னையில் படமாக்கப்பட்டது. பின்னர் மணிஷா யாதவ் நீக்கப்பட்டு நடிகை சிருஷ்டி டங்கே நடித்தார், மற்றும் ஒரு மருத்துவ மாணவி பாத்திரத்தில் நடிப்பது தெரியவந்தது. இனியா என்பது படத்தின் தலைப்பு பெயரிடப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க தெரியவந்தது, மற்றும் நமிதா கபூர் (நடிகை) அவர் எதிர்மறை வேடத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.[8]. நடிகர் தம்பி ராமையாவும் உடன் நடித்தார்.

ஜூலை 2016ல் கொல்லிமலையில் 2,000 அடி உயரத்தில் பெரிய மரத்தால் பெட்டிகள் அமைக்கப்படு படமாக்கப்பட்டது.[9] திரையரங்குகள் கிடைக்காததால் படத்தின் வெளியீடு பல முறை தாமதமாகி, 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவந்தது.[10]

இசையமைப்பு

Pottu
Soundtrack by
Amresh Ganesh
வெளியீடு2019
இசைப் பாணிSoundtrack
நீளம்18:53
இசைத்தட்டு நிறுவனம்Triple V Records
இசைத் தயாரிப்பாளர்Amresh Ganesh
Amresh Ganesh chronology
Charlie Chaplin 2
(2019)
Pottu
(2019)
Sathru
(2019)

படத்தின் இசையமைப்பை அம்ரேஷ் கணேஷ் மேற்கொண்டார்.[11]

பாடல் வரிசை
எண் தலைப்புபாடகர்கள் நீளம்
1. "அடி போடி சண்டாளி"  வி. வி. பிரசனா, வந்தனா 5:16
2. "மலை மேல சாமியா"  மாலதி, ஒரத்தநாடு கோபு 4:45
3. "குளிக்கு தாக்காதே"  கானா பாலா 4:16
4. "அம்மா ஜகதாரணி"  அம்ரிஷ் 4:35
மொத்த நீளம்:
18:53

வெளியீடு

தமிழில் பொட்டு என்ற பெயரில் 2019 மார்ச் 8 அன்று வெளிவந்தது,[12] தெலுங்கில் பொட்டு என்ற பெயரிலும்[13] மற்றும் "பிந்தி" என்ற பெயரிலும் வெளியானது.[14].

விமர்சனம்

இத்திரைப்படம் பரவலாகஎதிர்மறையான விமர்சங்களையே எதிர்கொண்டது.[15]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.