பைசண்டைன் கட்டிடக்கலை

பைசண்டைன் கட்டிடக்கலை என்பது, பைசண்டைன் பேரரசு காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியாகும். கி.பி 330ல், கொன்ஸ்டண்டைன், உரோமப் பேரரசின் தலைநகரத்தை பைசண்டியத்துக்கு மாற்றியதுடன் பைசண்டைன் பேரரசு உதயமானது. இந்த பைசண்டியம் என்றபெயர் பின்னர் கொன்ஸ்டண்டினோப்பிள் என்று மாற்றப்பட்டது. தற்போது இதுவே இஸ்தான்புல் என வழங்குகிறது.

இக் கட்டுரை
மேலைநாட்டுக்
கட்டிடக்கலை வரலாற்றுத்

தொடரின்
ஒரு பகுதியாகும்.

புதியகற்காலக் கட்டிடக்கலை
பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை
சுமேரியக் கட்டிடக்கலை
செந்நெறிக்காலக் கட்டிடக்கலை
பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை
பண்டை உரோமன் கட்டிடக்கலை
மத்தியகாலக் கட்டிடக்கலை
பைசண்டைன் கட்டிடக்கலை
ரோமனெஸ்க் கட்டிடக்கலை
கோதிக் கட்டிடக்கலை
மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
பரோக் கட்டிடக்கலை
புதியசெந்நெறிக்காலக் கட்டிடக்கலை
நவீன கட்டிடக்கலை
Postmodern architecture
Critical Regionalism
தொடர்பான கட்டுரைகள்
கட்டத்தைத் தொகுக்கவும்

ஆரம்பகால பைசண்டைன் கட்டிடக்கலை, உரோமக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது. இக் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக, பைசண்டியம் சுவர்கள், யெரெபாட்டன் சரே என்பன விளங்குகின்றன.

ஆரம்பகாலப் பைசண்டைன் கட்டிடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டான கொன்ஸ்டண்டினோப்பிளில் உள்ள 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹேகியா ஐரீன் தேவாலயம் - வெட்டுமுகப் படம்

அண்மைக் கிழக்கு நாடுகளின் கட்டிடக்கலைச் செல்வாக்கினால், படிப்படியாகப் புதிய பாணியொன்று உருவாகத் தொடங்கியது. அத்துடன், கிறிஸ்தவ ஆலயக் கட்டிடக்கலையில் இன்றுவரை பின்பற்றப்படும், கிரேக்க சிலுவைக் கிடைப்பட வடிவம் பின்பற்றப்பட்டது. கற்களுக்குப் பதிலாகச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கிளாசிக்கல் ஒழுங்குகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. வளைவான அலங்காரங்களுக்குப் பதில் மொசைக்குகள் பயன்படுத்தப்பட்டன. குவிமாடங்களைத்(dome) தாங்குவதற்காகப் பெண்டெண்டிவ் என வழங்கப்படும் புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இறுதியில் பைசண்டைன் கட்டிடக்கலை, ரோமனெஸ்க் மற்றும் கோதிக் (Gothic) கட்டிடக்கலைகளுக்கு இடம் விட்டு ஒதுங்கியது. கிழக்கில் இது, ஆரம்பகால இஸ்லாமியக் கட்டிடக்கலையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. டமாஸ்கஸில் உள்ள உம்மாயாட் பெரிய பள்ளிவாசல், மற்றும் ஜெரூசலத்தில் உள்ள டோம் ஒப் த ரொக் (Dome of the Rock) என்பன சிறந்த உதாரணங்களாகும்.

பிரம்மாண்டமான பைசண்டைன் கட்டடக்கலையின் பல அம்சங்களைக் காட்டும் ஹேகியா சோபியாவின் உட்பகுதி.

பைசண்டைன் கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணங்களாக விளங்குவன:

தற்கால எகிப்தில்

  • சென் கத்தறீன் மடாலயம், சினாய்

தற்கால கிரீசில்

  • நியா மோனி கத்தோலிக்கொன், சியோஸ்
  • புரோண்டோச்சியோன் மடாலயம், மிஸ்ட்ரா
  • மவுண்ட் அத்தோஸ் மடாலயங்கள்

தற்கால இத்தாலியில்

  • எக்சார்ச் மாளிகை, ரவேன்னா
  • சன் மார்க்கோ டி வெனெஸியா
  • டோர்செல்லொ பேராலயம், வெனிஸ்

தற்காலத் துருக்கியில்

தற்கால உக்ரேனில்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.