பெர்வேஸ் முஷாரஃப்

பெர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கையாண்டு வருகின்றார்.[1]

பெர்வேசு முசாரப்
Pervez Musharraf

پرویز مشرف  (உருது)
முசாரப் தாவோசு, உலக பொருளாதார மன்றத்தில் (2008)
10-வது பாக்கித்தான் அரசுத்தலைவர்
பதவியில்
20 சூன் 2001  18 ஆகத்து 2008
பிரதமர் சபாருல்லா கான் சமாலி
சவுத்ரி உசைன்
சௌக்காத் அசீசு
மியான் சூம்ரோ (பதில்)
யூசஃப் ரசா கிலானி
முன்னவர் முகமது ரபீக் தாரர்
பின்வந்தவர் மியான் சூம்ரோ (பதில்)
பாக்கித்தானின் தலைமை நிறைவேற்று அதிகாரி
பதவியில்
12 அக்டோபர் 1999  21 நவம்பர் 2002
குடியரசுத் தலைவர் முகமது ரபீக் தாரர்
முன்னவர் நவாஸ் ஷெரீப் (பிரதமர்)
பின்வந்தவர் சபாருல்லா சமாலி (பிரதமர்)
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 அக்டோபர் 1999  23 அக்டோபர் 2002
முன்னவர் நவாஸ் ஷெரீப்
பின்வந்தவர் ராவ் இக்பால்
தலைவர், படை அதிகாரிகள் குழு
பதவியில்
8 அக்டோபர் 1998  7 அக்டோபர் 2001
முன்னவர் ஜெகாங்கீர் கரமாத்
பின்வந்தவர் அசீசு கான்
தலைவர், இராணுவ அதிகாரிகள்
பதவியில்
6 அக்டோபர் 1998  28 நவம்பர் 2007
முன்னவர் செகாங்கீர் கரமாத்
பின்வந்தவர் அசுபக் கயானி
தனிநபர் தகவல்
பிறப்பு பெர்வேஸ் முஷாரஃப்
11 ஆகத்து 1943 (1943-08-11)
தில்லி, பிரித்தானிய இந்தியா (இன்றைய இந்தியா)
தேசியம் பாக்கித்தானியர்
அரசியல் கட்சி அனைத்துப் பாக்கித்தான் முசுலிம் முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
பாக்கித்தான் முசுலிம் முன்னணி (Q)
வாழ்க்கை துணைவர்(கள்) சேபா முசாரப்
பிள்ளைகள் அய்லா (மகள்)
பிலால் (மகன்)
படித்த கல்வி நிறுவனங்கள் போர்மன் கிறித்துவக் கல்லூரி
பாக்கித்தான் இராணுவ கல்வி நிலையம்
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்
ரோயல் பாதுகாப்புக் கல்லூரி
விருதுகள் நிசான்-இ-இம்தியாசு
தம்கா-இ-பசாலத்
இம்தியாசி சனாத்
அல்-சவுத் பதக்கம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  பாக்கித்தான்
கிளை  பாக்கித்தான் இராணுவம்
பணி ஆண்டுகள் 1961–2007
தர வரிசை ஜெனரல்
படையணி பீரங்கிப்படை
படைத்துறைப் பணி I கோர்ப்சு
சிறப்பு சேவைகள் பிரிவு
டிஜி, இராணுவ நடவடிக்கைகள்
40-வது இராணுவப் பிரிவு, ஒக்காரா
சமர்கள்/போர்கள் இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
சியாச்சின் பிணக்கு
கார்கில் போர்
ஆப்கான் உள்நாட்டுப் போர் (1996–2001)]]
1999 பாக்கித்தான் இராணுவப் புரட்சி
2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்

2007 மார்ச் மாதம் நாட்டின் உயநீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப் படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளைக் கொன்றார்.[1]

2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

மேற்கோள்கள்

  1. Haider, Kamran (நவம்பர் 3 2007). "Musharraf imposes emergency rule". ரொய்டர்ஸ். http://www.reuters.com/article/newsOne/idUSCOL19928320071103?sp=true. பார்த்த நாள்: 2007-11-03.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.