பெர்னான்டோ டி நோரன்கா

பெர்னான்டோ டி நோரன்கா (Fernando de Noronha) பிரேசிலின் கடற்கரையிலிருந்து 354 km (220 mi) தொலைவில் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் 21 தீவுகளையும் தீவுத்திட்டுக்களையும் உள்ளடக்கிய ஓர் தீவுக்கூட்டம் ஆகும். பெர்னோ டி லோரோன்கா என்ற போர்த்துக்கேய வணிகருக்கு பிரேசிலிலிருந்து மரங்களை இறக்குமதி செய்து உதவியமைக்காக போர்த்துக்கேய மன்னர் இத்தீவுக் கூட்டங்களை வழங்கினார்; அதன் காரணமாகவே இத்தீவுக்கூட்டம் இப்பெயரைப் பெற்றது. முதன்மைத் தீவின் பரப்பளவு 18.4 சதுர கிலோமீட்டர்கள் (7.1 sq mi) ஆகவும் மக்கள்தொகை 2012இல் 2,718 ஆகவும் உள்ளன.[1] இப்பகுதி பிரேசிலின் இரியோ கிராண்டு டோ நார்த் மாநிலத்திற்கு அண்மையில் இருந்தபோதும் பெர்னம்புகோ மாநிலத்தின் சிறப்பு நகராட்சி (distrito estadual) ஆக உள்ளது.[2]

பெர்னான்டோ டி நோரன்கா தீவுக்குழுமம்
உள்ளூர் பெயர்: ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ
டோ மியோ மற்றும் கான்சிக்சோ கடற்கரைகள்
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
ஆள்கூறுகள்3°51′13.71″S 32°25′25.63″W
தீவுக்கூட்டம்ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ
மொத்தத் தீவுகள்21
முக்கிய தீவுகள்பெர்னான்டோ டி நோரன்கா; இலா ரட்டா; இலா டோ மியோ; இலா செலா கினெடா; இலா ரசா
பரப்பளவு26 km2 (10 sq mi)
நீளம்10
(பெர்னான்டோ டி நோரன்கா தீவு)
அகலம்3.5
(பெர்னான்டோ டி நோரன்கா தீவு)
உயர்ந்த ஏற்றம்323
உயர்ந்த புள்ளிமோர்ரோ டொ பைக்கோ
நிர்வாகம்
பிரேசில்
மண்டலம்வடகிழக்கு மண்டலம்
மாநிலம்பெர்னம்புகோ
பெரிய குடியிருப்புவிலா டோசு ரெமெடியோசு
மக்கள்
மக்கள்தொகை2,718[1] (2012)
மேலதிக தகவல்கள்
அதிகாரபூர்வ இணையதளம்www.Noronha.pe.gov.br
அலுவல் பெயர்Brazilian Atlantic Islands: Fernando de Noronha and Atol das Rocas Reserves
வகைNatural
வரன்முறைvii, ix, x
தெரியப்பட்டது2001 (25th session)
உசாவு எண்1000
State PartyBrazil
RegionLatin America and the Caribbean

இதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருதி 2001இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இதன் நேர வலயம் ஆண்டு முழுவதும் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-02:00 ஆகும். ரெசிஃபியிலிருந்து (545 km) வானூர்தி மூலமோ பயணக்கப்பல் மூலமோ அல்லது நதாலிலிருந்து (360 km) வானூர்தி மூலமோ பெர்னான்டோ டி நோரன்காவை அடையலாம்.[3] இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சுற்றுச்சூழல் காப்புக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காட்சிக்கூடம்

மேற்சான்றுகள்

  1. IBGE (Brazilian Institute of Geography and Statistics) (2012). "IBGE - Cidades - Pernambuco - Fernando de Noronha - Estimativa da População - 2012" (Portuguese). பார்த்த நாள் 2013-10-20.
  2. "Fernando de Noronha - Transfer Aeroporto Porto de Galinhas, Locação de Veículos e Buggys, Passeios, Transfer em Van, Zafira, Dobló". Turismodonordeste.com. பார்த்த நாள் 2014-05-17.
  3. "Fernando de Noronha - Pimentel lamenta suspensão de cruzeiro - Assembleia Legislativa do Estado de Pernambuco". Alepe.pe.gov.br. பார்த்த நாள் 2014-05-17.

வெளி இணைப்புகள்

சுற்றுலா

ஒளிதங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.