பெரும் கோலாலம்பூர்
பெரும் கோலாலம்பூர் (Greater Kuala Lumpur) என்று கோலாலம்பூர் பெருநகரப் பகுதியின் புவியியல் எல்லைகளை வரையறுக்குமாறு குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலும் கிளாங் பள்ளத்தாக்குடன் ஒத்திருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. இதன் பரப்பளவு 2,793.27 சதுர கிமீ ஆகும்.[1]
வரையறை
கோலாலம்பூரைச் சுற்றியுள்ள உள்ளாட்சி நடைபெறும் பத்து நகராட்சிகளின் மொத்தப் பரப்பளவைக் கொண்டதாக பெரும் கோலாலம்பூர் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த பத்து நகராட்சிகளாவன: கோலாலம்பூர் நகர மண்டபம் (DBKL), பெர்பதனன் புத்ரஜயா, ஷா ஆலம் நகர மன்றம் (MBSA), பெடலிங் ஜெயா நகர மன்றம் (MBPJ), கிளாங் நகராட்சி மன்றம் (MPK), கஜங் நகராட்சி மன்றம் (MPKj), சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPSJ), செலயங் நகராட்சி மன்றம் , அம்பங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) மற்றும் செபாங் நகராட்சி மன்றம் (MPSp).[2]
பயன்பாடு
பெரும் கோலாலம்பூர் என்றப் பயன்பாடு அண்மையில்தான் புழக்கத்தில் வந்துள்ளது; கிளாங் பள்ளத்தாக்கு என்றே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டில் மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கால் வெளியிடப்பட்ட பொருளியல் நிலைமாற்றத் திட்டத்தில் ஊரக மாநகரம் உருவாக்கல் மூலம் பொருளியல் வளர்ச்சியைத் தூண்டும் வண்ணம் இந்தச் சொல்லை பரப்புரை செய்தார்.
புள்ளிவிவரம்
2010ஆம் ஆண்டில் பெரும் கோலாலம்பூரின் மக்கள் தொகை ஆறு மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த வருமானத்திற்கு இப்பகுதி RM263 பில்லியன் பங்களித்துள்ளது.