கிள்ளான் பள்ளத்தாக்கு

கிள்ளான் பள்ளத்தாக்கு (Klang Valley) மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளையும் அடுத்துள்ள சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நகரங்களையும் அடக்கிய நிலப்பகுதி ஆகும். இதன் தற்காலப் பெயராக கோலாலம்பூர் பெருநகர்ப் பகுதி அல்லது பெரும் கோலாலம்பூர் உள்ளது. இது புவியியல் ரீதியாக தித்திவாங்சா மலைத்தொடர் வடக்கிலும் கிழக்கிலும், மலாக்கா நீரிணை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

கிளாங் பள்ளத்தாக்கில் சிலாங்கூர் மாநிலம் மற்றும் கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி எல்லைகளுக்குள் அமைந்துள்ள முதன்மை நகரங்கள்

இதன் மக்கள் தொகை 2004 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4 மில்லியன் மக்கள். இது மலேசியத் தொழில் மற்றும் வணிகத்திற்கான முதன்மை இடமாக விளங்குகிறது.[1] 2010இன் கணக்கெடுப்பின்படி 8.1 மில்லியன் மக்கள் இப்பகுதியில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் மலேசியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் இந்தோனேசியா, இந்தியா, நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் குடியேற்றத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. "world gazetteer". மூல முகவரியிலிருந்து 2012-12-05 அன்று பரணிடப்பட்டது.
  2. http://archive.is/20130209161056/http://www.world-gazetteer.com/wg.php?x=1263135486&men=gcis&lng=en&des=gamelan&geo=-152&srt=pnan&col=dhoq&msz=1500&va=&pt=a
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.