பெரியவெண்மணி (பெரம்பலூர்)

பெரியவெண்மணி (Periyaveṇmaṇi Gram Panchayat), என்பது தமிழ்நாட்டின், பெரம்பலூர் மாவட்டத்தில், குன்னம் வட்டாரத்தில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும்.[1]. இது சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

2011 ஆம் ஆண்டு வரை இது வரகூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் இருந்தது, தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் குன்னம் சட்டமன்ற தொகுதியின் கீழ் மாற்றப்பட்டது.[2].பெரியவெண்மணியானது வருவாய் கிராமங்களின் அடிப்படையில் கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது.[3].

இவ்வூரில் புகழ்பெற்ற பெரியவெண்மணி பெரியாண்டவர் கோயில் மற்றும் பெரியவெண்மணி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. சின்னவெண்மணி
  2. சின்னவெண்மணி காலனி
  3. கொத்தவாசல்
  4. கொத்தவாசல் காலனி
  5. புதுக்குடிசை

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.