பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலிக் இருநீரிலி

பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலிக் இருநீரிலி (Benzoquinonetetracarboxylic dianhydride) என்பது C10O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கார்பனின் ஆக்சைடு சேர்மமான இது பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலிக் அமிலத்திலிருந்து இரண்டு நீர் மூலக்கூறுகளை நீக்குவதால் கிடைக்கிறது.

பென்சோகுயினோன்டெட்ராகார்பாக்சிலிக் இருநீரிலி
இனங்காட்டிகள்
476-37-9 Y
ChemSpider 32686035 N
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
C10O8
வாய்ப்பாட்டு எடை 248.10 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

சிவப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் 140 பாகை செல்சியசு வெப்பநிலை வரை உலர் காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. ஈதர், கார்பன் டெட்ராகுளோரைடு, டைகுளோரோமீத்தேன், காபன் டைசல்பைடு, போன்ற கரிமக் கரைப்பான்களில் கரையாது. அசிட்டோன், எத்தில் அசிட்டேட்டு, டெட்ரா ஐதரோபியூரான், எத்தனால், நீர் போன்ற சேர்மங்களுடன் வினைபுரிகிறது. மெத்திலேற்றம் அடைந்த பென்சீன் வழிப்பொருள்களில் கரைந்து ஆரஞ்சு முதல் ஊதா நிறம் வரையிலான கரைசல்களைக் கொடுக்கிறது. ஈரக்காற்றில் இச்சேர்மம் பட நேர்ந்தால் நீல நிறத்திற்கு மாறுகிறது.

1963 ஆம் ஆண்டு பி.ஆர். அம்மாண்டு இச்சேர்மத்தை தொகுப்பு முறையில் தயாரித்தார். இதுவரை விவரிக்கப்பட்டுள்ள π எலக்ட்ரான் ஏற்பிகளில் இதுவே வலிமையானது என இவர் விவரித்தார் [1].

மேற்கோள்கள்

  1. P. R. Hammond (1963), 1,4-Benzoquinone Tetracarboxylic Acid Dianhydride, C10O8: A Strong Acceptor. Science, Vol. 142. no. 3591, p. 502 எஆசு:10.1126/science.142.3591.502
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.