பெனா தேசிய அரண்மனை

பெனா தேசிய அரண்மனை (Pena National Palace; போர்த்துக்கீசம்: Palácio Nacional da Pena) என்பது போர்த்துகலின் சின்ட்ராவில் அமைந்துள்ள புனைவிய அரண்மனை ஆகும். சின்ட்ரா நகரிலுள்ள மலையின் மேல் அமைந்துள்ள, இதனை தெளிவான நாட்களில் லிஸ்பனிலிருந்து பார்க்கலாம். இது தேசிய சின்னமும் 19 ஆம் நூற்றாண்டு புனைவிய வெளிப்பாடாகவும் உள்ளது. இந்த அரண்மனை உலகப் பாரம்பரியக் களமாகவும் போர்த்துக்கல்லின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது. போர்த்துக்கல் அதிபரினால் அந்நாட்டு வைபவங்களுக்கும் ஏனைய அரசாங்க அலுவல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பெனா தேசிய அரண்மனை
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
இடம்சின்ட்ரா, போர்த்துகல்
கட்டுமான ஆரம்பம்மத்திய காலம்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்பரொன் வில்கெம் லுட்விக்
பிற வடிவமைப்பாளர்போர்டிணன்ட் II

பார்வையாளர்களுக்காகவும் திறந்துள்ள இதன் பார்வையாளர்கள் 2013 இல் 755,735 ஆகக் காணப்பட்டு, அவ் ஆண்டில் அதிகம் பார்வையாளர்களின் வருகையைப் பெற்ற போர்த்துக்கல் நினைவுச் சின்னமாக விளங்குகிறது.[1]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.