பூஞ்ச் மாவட்டம், இந்தியா
பூஞ்ச் மாவட்டம் (Poonch District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி சூழ்ந்து உள்ளது. கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரமுல்லா மாவட்டம், பட்காம் மாவட்டம், குல்காம் மாவட்டம் மற்றும் ரஜௌரி மாவட்டம் சூழ்ந்துள்ளது. 1947ஆம் ஆண்டில் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின் போது பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. எஞ்சிய பகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக உள்ளது. பூஞ்ச் நகரம் பூஞ்ச் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. பூஞ்ச் மாவட்டம், மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து தரைவழியாக 497 கிலோ மீட்டர் தொலைவிலும், உதம்பூரிலிருந்து 291 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பூஞ்ச் மாவட்டம் இந்திய இராணுவத்தின் முக்கிய கேந்திரமாக உள்ளது. பூஞ்ச் மாவட்டம் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
பூஞ்ச் மாவட்டம், இந்தியா | |
---|---|
மாவட்டம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
தலைமையிடம் | பூஞ்ச் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 185101 |
தொலைபேசி குறியீடு | 911965 |
இணையதளம் | www.poonch.nic.in |
நிர்வாகம்

பூஞ்ச் மாவட்டம் ஹவேலி, மண்டி, மெந்தர், சுரன்கோட், சந்தக், மான்கோட், பாலகோட் மற்றும் ஃபப்ளியாஸ் என எட்டு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தின் 179 கிராமங்களின் மேம்பாட்டிற்காக பூஞ்ச், மண்டி, மெந்தர், பாலக்கோட், சுரன்கோட் மற்றும் ஃபப்ளியாஸ் என ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படுகிறது.
அரசியல்
பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட், மெந்தர் மற்றும் பூஞ்ச் என மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்ட மொத்த மக்கள் தொகை 476,820 ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு பேர் 285 பேர் வீதம் உள்ளனர். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 68.69% உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆக உள்ளது. இம்மாவட்டத்தில் இசுலாமிய மக்கள் தொகை 87% விழுக்காடாக உள்ளது. [1]
படக்காட்சியகம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- http://www.censusindia.gov.in/2011census/dchb/0105_PART_B_DCHB_PUNCH.pdf DISTRICT CENSUS HAND BOOK, POONCH
வெளி இணைப்புகள்
- பூஞ்ச் மாவட்டத்தின் அலுவல் இணையதளம்
- பூஞ்ச் மாவட்டத்தின் வரைபடம்
- The entire list of rulers starting from Raja Moti Singh
- List of places in Poonch